- Advertisement -
Homeகிரிக்கெட்டிம் டேவிட் மாதிரி ஒருத்தர் பேட் பண்றப்போ.. பிளே ஆப்க்கு நாங்க போகணும்னா.. ரிஷப்...

டிம் டேவிட் மாதிரி ஒருத்தர் பேட் பண்றப்போ.. பிளே ஆப்க்கு நாங்க போகணும்னா.. ரிஷப் பந்த் உறுதி..

-Advertisement-

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, இந்த சீசனின் தொடக்கத்தில் ஆடிய ஆட்டத்தை பார்க்கும் போது நிச்சயம் இவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற மாட்டார்கள் என்று தான் தோன்றியது. ஆனால், கடைசி ஐந்து போட்டிகளில் அவர்கள் ஆடி வரும் ஆட்டம், ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற தகுதி உள்ள அணிகளில் ஒன்றாகவும் மாற்றி உள்ளது.

இரண்டு தோல்விகளுக்கு பின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தங்களின் வெற்றி கணக்கை தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ், மீண்டும் இரண்டு தோல்விகளை சந்தித்திருந்தது. இதனால், ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றியுடன் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ், கடைசியில் ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் தற்போது ஐந்தாவது இடத்திற்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

அந்த வகையில், சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தங்களின் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரையும் டெல்லி அணி பதிவு செய்துள்ளது. சமீபத்திய போட்டிகளில் அசுரனை போல ஆடி வரும் இளம் தொடக்க வீரர் ஜேக் ஃப்ரேஷர், மும்பைக்கு எதிராக 311 ஸ்ட்ரைக் ரேட்டில் 84 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரது விஸ்வரூப தொடக்கம், டெல்லி அணி 257 ரன்கள் எடுக்கவும் உதவி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியும் மிக அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது. திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் என அனைவரும் அதிரடி காட்டியதால் அவர்களும் 20 ஓவர்கள் முடிவில் 247 ரன்கள் எடுத்திருந்தனர். 10 ரன்களில் வெற்றியையும் அவர்கள் கோட்டை விட, மீண்டும் ஒரு தோல்வியால் அந்த அணியின் ரசிகர்கள் துவண்டு போயினர்.

-Advertisement-

மறுபக்கம், தொடர் தோல்விகளால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, தற்போது ஐந்தாவது இடம் வரை முன்னேறி அசத்தி உள்ளது. இந்த வெற்றிக்கு பின் பேசியிருந்த டெல்லி கேப்டன் ரிஷப் பந்த், “250 ரன்கள் மேல் அடித்த போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், இம்பாக்ட் பிளேயர் விதியால் இதுவும் நாளுக்கு நாள் கடினமாக கொண்டே இருக்கிறது. என்னால் நிச்சயம் இதை செய்து விட முடியும். ஆனால் பந்து வீச்சாளர்களும் அதிக தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

டிம் டேவிட் போன்ற பேட்ஸ்மேன் இருக்கும் போதும் அவருக்கு எதிராக போட்ட பிளான் இன்று வொர்க் அவுட்டானது. ஜேக் ஃப்ரேஷர் முதல் நாளில் இருந்தே அற்புதமாக ஆடி வருகிறார். இளம் வீரர்களிடம் இருந்து இப்படி ஒரு ஆட்டத்தை தான் நாங்கள் விரும்புகிறோம். நாளுக்கு நாள் அவரும் முன்னேற்றம் கண்டு வருகிறார்.

எங்களின் பிளே ஆப் வாய்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் ஒரு போட்டியை மட்டும் தான் முக்கியமாக கருதி ஆடி வருகிறோம்” என தெரிவித்தார்.

-Advertisement-

சற்று முன்