- Advertisement 3-
Homeவிளையாட்டுஇது ஒன்னும் புதுசு இல்ல - நாங்க வருவோம், ஜெயிப்போங்கரது எதிர்பாத்தது தான்.. இளம் வீரர்களை...

இது ஒன்னும் புதுசு இல்ல – நாங்க வருவோம், ஜெயிப்போங்கரது எதிர்பாத்தது தான்.. இளம் வீரர்களை நான் இப்படி தான் நடத்துவேன் – ரோகித் சர்மா பேச்சு.

- Advertisement 1-

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய வேளையில் முதலாவதாக நடைபெற்று முடிந்த குவாலிபயர் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதனை தொடர்ந்து நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணியானது 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது. அடுத்த போட்டியில் மும்பை அணியானது குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 182 ரன்களை குவித்தது.

பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய லக்னோ அணி 16.3 ஓவர்களில் 101 ரன்கள் மட்டுமே குவித்ததால் 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : நாங்கள் குவாலிபயறுக்கு வருவோம் ஜெயிப்போம்னு நான் எதிர்பார்த்தேன். கடந்த பல ஆண்டுகளாகவே நாங்கள் இதைத்தான் செய்து வருகிறோம்.

சில விடயங்களை நாங்கள் செய்ய கூடாதென்று ரசிகர்கள் எங்களிடம் எதிர்பார்ப்பார்கள். பல தடைகளை கடந்து நாங்கள் முன்னேறி வருகிறோம். இந்த சீசன் ஆரமித்தபோது, இதற்காக நெறைய உழைக்கவேண்டும் என்பதை நாங்கள் அறிந்தோம். நிச்சயம் இந்த வெற்றி எங்களுக்கும் எங்களது அணியின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளித்திருக்கிறது.

- Advertisement 2-

கடந்த ஆண்டு எங்கள் அணியில் சப்போர்ட் பவுலராக இருந்த ஆகாஷ் மதுவாலிடம் இருந்த திறமையை நாங்கள் கவனித்து வந்தோம். இந்த ஆண்டு ஆர்ச்சர் விளையாட முடியாமல் போனதும் நிச்சயம் அவரிடம் உள்ள திறமையை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அதே சமயம் அவர் எங்களுக்கான வேலையை சரியாக செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அந்த வகையில் இந்த போட்டியில் அவர் மிகச் சிறப்பாக பந்துவீசி அசத்தியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாகவே மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் வீரர்கள் இந்திய அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள். எனவே இளம் வீரர்களை சரியாக வழி நடத்தி அவர்களை சிறப்பாக கையாண்டால் நிச்சயம் அவர்களிடம் இருந்து நல்ல ஆட்டம் வெளிவரும். அந்த வகையில் இம்முறையும் நாங்கள் இளம் வீரர்களை ஆதரித்து வருகிறோம்.

அதே சமயம் இளம் வீரர்களை சிறப்பாகவும் அணியின் ஒரு அங்கமாக உணர வைக்க வேண்டும். அவர்கள் உள்நாட்டில் பல போட்டிகளை விளையாடி இருப்பார்கள். ஆனால் ஐ.பி.எல் வேறு மாதிரியான ஒரு விளையாட்டு. இதில் நிறைய அழுத்தம் இருக்கும். ஒரு கேப்டனாக என்னுடைய வேலை என்னவென்றால் அவர்கள் கிரௌண்டில் கம்போர்டபிளாக உணரவைப்பது தான்.

இதையும் படிக்கலாமே: சூரியகுமார் யாதவை வெளியேற்றி ரோஹித் சர்மா எடுத்த சூப்பர் முடிவு. நீங்க பண்ணதும் தான் கரெக்ட் என புகழும் நெட்டிசன்கள்

மும்பை மைதானத்தை விட சென்னை மைதானம் சற்று வித்தியாசமாக உள்ளது. இங்கு பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டால் தான் வெற்றிபெற முடியும். இந்த போட்டியில் கிடைத்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்