- Advertisement 3-
Homeவிளையாட்டுஷிவம் துபே பந்து போட்டப்போ நடுவுல புகுந்து ரோஹித் செஞ்ச விஷயம்.. அப்போ ஹர்திக் இடத்திற்கு...

ஷிவம் துபே பந்து போட்டப்போ நடுவுல புகுந்து ரோஹித் செஞ்ச விஷயம்.. அப்போ ஹர்திக் இடத்திற்கு ஆப்பு தான் போலயே..

- Advertisement 1-

சிஎஸ்கே அணியில் சிறப்பாக ஆடியதன் மூலம் ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான வீரராக உருவெடுத்திருந்தார் ஷிவம் துபே. 30 வயதிலும் அதிரடியான ஆட்டம் என்ற ரூட்டை எடுத்ததால் பிசிசிஐயின் பார்வையும் துபே மீது விழுந்தது. இதனால் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்து வரும் டி 20 தொடரிலும் இந்திய அணிக்கு தேர்வாகி இருந்தார்.

ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட ஆல் ரவுண்டர்கள் இந்திய அணியில் தேர்வாகாமல் போக, இது ஷிவம் துபேவிற்கும் மிகப்பெரிய சாதகமாக அமைந்திருந்தது. அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஷிவம் துபே, இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் அரைசதத்தை கடந்ததுடன் மட்டுமில்லாமல் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.

மற்ற முன்னணி பேட்ஸ்மேன்களை விட அதிக கவனம் ஈர்த்த ஷிவம் துபே, நிச்சயம் டி 20 உலக கோப்பையிலும் தேர்வாகி விடுவார் என்றே தெரிகிறது. அப்படி அவர் ஆடும் பட்சத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கான வாய்ப்பு நெருக்கடிக்கு உள்ளாகலாம் என்றும் தெரிகிறது. அதே போல, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூட ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஷிவம் துபேவை தான் டி 20 உலக கோப்பைத் தொடரில் ஆட வைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனது சிறப்பான ஆட்டத்திற்காக சிஎஸ்கே மற்றும் தோனிக்கு நன்றி சொல்லி இருந்த ஷிவம் துபே, இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவும் கூட தனது ஆட்டத்தை மெருகேற்றி வருவதுடன் நிறைய ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்திருந்தார். ஐபிஎல் போட்டிகளில் துபே அதிகம் பந்து வீசாத போதிலும், சர்வதேச போட்டிகளில் அவர் பந்து வீசும் வாய்ப்பை தொடர்ந்து அளிக்க இருப்பதாகவும் வாக்கு கொடுத்துள்ளாராம் ரோஹித் ஷர்மா.

- Advertisement 2-

இந்த நிலையில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது டி 20 போட்டியில் ரோஹித் ஷர்மா கொடுத்த அட்வைஸிற்கு பின்னர் ஷிவம் துபே பந்து வீச்சில் நடந்த அற்புதம் பற்றிய செய்தி தற்போது அதிக கவனம் ஈர்த்து வருகிறது. இந்த போட்டியில் தனது முதல் ஓவரை பவர்பிளே முடிந்த பின்னர் வீசி இருந்தார் ஷிவம் துபே. அப்போது அந்த ஓவரில் நான்கு பந்துகளை அவர் வீசிய பின்னர், அவரிடம் சில ஆலோசனைகள் வழங்கினார் ரோஹித்.

அப்படி அவர் பேசி முடித்த அடுத்த பந்திலேயே முக்கிய விக்கெட்டை ஷிவம் துபே வீழ்த்த, உற்சாகத்தில் திளைத்து போனார் ரோஹித். இது தொடர்பான வீடியோ, தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

சற்று முன்