- Advertisement 3-
Homeவிளையாட்டுவீரர்களை பார்த்து ரோஹித் சொன்ன கெட்ட வார்த்தை.. ஒரு கேப்டனே இப்டி சொல்லலாமா.. வெறுத்த...

வீரர்களை பார்த்து ரோஹித் சொன்ன கெட்ட வார்த்தை.. ஒரு கேப்டனே இப்டி சொல்லலாமா.. வெறுத்த ரசிகர்கள்…

- Advertisement 1-

இந்திய அணியின் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தற்போது இந்திய அணியை ரோஹித் ஷர்மா தான் கேப்டனாக இருந்து வழிநடத்தி வருகிறார். இவர் எப்போதாவது ஓய்வில் இருக்கும் போது மற்ற வீரர்கள் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பை பெறுவார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியை சிறப்பாக தலைமை தாங்கி வரும் ரோஹித் ஷர்மாவிற்கு எட்டாக்கனியாக இருப்பது ஐசிசி கோப்பை மட்டும் தான். கடந்த ஆண்டு இவரது தலைமையில் இந்திய அணி, ஒரு நாள் உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் முன்னேற்றம் கண்டிருந்தது. ஆனாலும் அதிர்ஷ்டம் கைகூடாமல் போக, இரண்டிலும் ரன்னர் அப் அணியாகவே மாறி இருந்தது இந்தியா.

இந்த ஆண்டு நடைபெற உள்ள டி 20 உலக கோப்பைத் தொடரை நிச்சயம் இளம் வீரர்களை கொண்டு இந்திய அணி கைப்பற்றி, ரோஹித் தலைமையில் எட்டாமல் இருக்கும் ஐசிசி கோப்பை சாபத்துக்கு முடிவு உருவாகும் என்பதும் ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனிடையே, தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆடி வருகிறது.

இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்ததால் அவர்களின் பேட்டிங் வரிசை மற்றும் ரோஹித்தின் கேப்டன்சி உள்ளிட்டவை கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருந்தது. அப்படி இருக்கையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2 வது டெஸ்ட் போட்டி தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

- Advertisement 2-

இதில், இரண்டாம் நாள் முடிவின் போது இந்திய அணி தங்களின் இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடி வரும் நிலையில், 171 ரன்கள் முன்னிலையும் வகிக்கின்றனர். இன்னும் ஒரு 100 ரன்களுக்கு மேல் அடித்து, சுமார் 300 ரன்கள் வரை இங்கிலாந்திற்கு இலக்காக கொடுத்தால் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உருவாகி, முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு தக்க பதிலடியையும் ரோஹித் அண்ட் கோ கொடுத்து விடலாம்.

இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு மத்தியில் ரோஹித் ஷர்மா சொன்ன தகாத வார்த்தை தொடர்பான செய்தி, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தனது தலைமையில் அணி ஃபீல்டிங் செய்யும் போது வீரர்கள் ஏதாவது தவறு செய்தால், தனது கோபத்தை நேரடியாகவே பல முறை அவர்களிடம் காட்டி உள்ளார் ரோஹித் ஷர்மா.

அந்த வகையில், இந்த டெஸ்டிலும் இந்திய அணி ஃபீல்டிங் செய்த சமயத்தில், தோட்டத்தில் நடப்பது போல நடந்து செல்லாமல் வேகமாக நடந்து செல்லுங்கள் என கூறியதுடன் ஒரு ஆங்கில கெட்ட வார்த்தையையும் இந்திய வீரர்களை நோக்கி களத்திலேயே பயன்படுத்தி உள்ளார் ரோஹித். இது தொடர்பான ஆடியோ ஸ்டம்ப் மைக்கில் தற்போது அதிக பரபரப்பையும் ரோஹித் மீது கண்டனங்களையும் உருவாக்கி உள்ளது.

சற்று முன்