- Advertisement 3-
Homeவிளையாட்டுஉனக்கு என்ன பைத்தியமா.. சிறுவயதில் ரோஹித்திற்கு இருந்த ஆசை.. திட்டிய பயிற்சியாளருக்கு ட்விஸ்ட் கொடுத்த கேப்டன்..

உனக்கு என்ன பைத்தியமா.. சிறுவயதில் ரோஹித்திற்கு இருந்த ஆசை.. திட்டிய பயிற்சியாளருக்கு ட்விஸ்ட் கொடுத்த கேப்டன்..

- Advertisement 1-

சமீபத்திய காலங்களில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகச்சிறந்த கேப்டனாக ரோஹித் ஷர்மா உருவெடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஐபிஎல் தொடரில் சுமார் 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி வந்த ரோஹித், ஐந்து முறை அவர்கள் கோப்பையை கைப்பற்றவும் மிக அதிகமாக உதவி இருந்தார்.

எந்த வீரர்களை எப்படி பயன்படுத்துவது, எந்த அணிக்கு எதிரான போட்டியின் போது யாரை களமிறக்க வேண்டும் என அனைத்தையும் தெளிவாக தெரிந்து வைத்திருந்த ரோஹித், மும்பை அணி நம்பர் ஒன் அணியாக தற்போது விளங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அவர் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்பட்டாலும் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் எடுத்துள்ள அவதாரம், சர்வதேச அணிகள் அனைத்திற்குமே மிகப்பெரிய அச்சுறுத்தலாக தான் உள்ளது.

ஐசிசி கோப்பையை வெல்ல முடியாத கேப்டன் என்ற ஒரு பெரிய விமர்சனம் இருந்தாலும் மற்ற போட்டிகளில் அவர் இந்திய அணியை வழிநடத்தும் விதம், அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக அவர் தொடர்வார் என்பதால் டி 20 உலக கோப்பை உள்ளிட்ட சில முக்கியமான தொடர்களில் ரோஹித் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக சவாலாக இருந்த டெஸ்ட் தொடரை வென்றுள்ள இந்திய அணி இன்னும் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வரும் மார்ச் 7ஆம் தேதி ஆட உள்ளது. இந்திய அணி ஏற்கனவே தொடரைக் கைப்பற்றி விட்டதால் வழக்கம் போல இதுவரை ஆடாத இளம் வீரர்களுக்கு ரோஹித் வாய்ப்பு வழங்கி இந்த முறையும் அணியில் ஏதேனும் மாற்றங்களை செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement 2-

இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் சிறு வயது பயிற்சியாளர் அவரைப் பற்றி தெரிவித்துள்ள கருத்து ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. ரோகித் சர்மாவின் சிறு வயது பயிற்சியாளரான தினேஷ் லாட், சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில், “பல ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை நானும் ரோஹித்தும் மெர்சிடஸ் கார் ஒன்று செல்வதை பார்த்தோம். அப்போது நான் இந்த காரை ஒரு நாள் வாங்குவேன் என என்னிடம் ரோஹித் கூறினார்.

அவர் அப்படி கூறியதும் நான் சற்று அதிர்ந்து போய், ‘உனக்கு பைத்தியம் எதுவும் பிடித்துவிட்டதா. அதை மிகவும் விலைமதிப்புள்ளது’ என தெரிவித்தேன். ஆனால் ரோஹித்தோ, ‘நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். நான் ஒரு நாள் நிச்சயம் வாங்குவேன்’ என என்னிடம் கூறினார்” என தினேஷ் லாட் தெரிவித்தார். அவர் சிறு வயதில் கண்ட கனவை பல கடின உழைப்புக்கு பின் சாதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்