- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலியை விமர்சித்த ரசிகர்கள்.. அவரு செஞ்சதுல தப்பே இல்ல.. நண்பன் போல தோள் கொடுத்த ரோஹித்..

கோலியை விமர்சித்த ரசிகர்கள்.. அவரு செஞ்சதுல தப்பே இல்ல.. நண்பன் போல தோள் கொடுத்த ரோஹித்..

- Advertisement 1-

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாக 14 மாதங்கள் கழித்து மீண்டும் டி 20 அணியில் இடம் பிடிக்க போகும் ரோஹித் மற்றும் கோலி குறித்து பல விதமான விமர்சனங்களும், ஆதரவுகளும் இருந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் டக் அவுட்டான ரோஹித் சர்மா, மூன்றாவது டி 20 போட்டியில், 121 ரன்கள் அடித்து பல சாதனைகளை புரிந்திருந்தார்.

இன்னொரு பக்கம் விராட் கோலி முதல் டி20 போட்டியில் சில தனிப்பட்ட காரணங்கள் காரணமாக ஆடாத நிலையில் இரண்டாவது போட்டியில் 29 ரன்களை அவர் அடித்து இருந்தார். இதனையடுத்து மூன்றாவது போட்டி பெங்களூரில் நடந்ததால் அவரின் ஃபேவரைட் மைதானம் என்று ரசிகர்களும் காத்திருந்தனர். ஆனால் முதல் பந்தியிலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார் விராட் கோலி.

சுமார் 110 க்கும் மேற்பட்ட சர்வதேச டி 20 போட்டிகளில் ஆடி உள்ள விராட் கோலி, கோல்டன் டக்கில் அவுட்டாவுது இது தான் முதல் முறை. இப்படி பல கட்டமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டி20 போட்டியில் திரும்ப ஆடிய விராட் கோலி பெரிய தாக்கத்தை இந்த முறை ஏற்படுத்தவில்லை. முன்னதாக இவரது பேட்டிங் டி 20 போட்டிகளில் நிதானமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருந்தது. அதனால் இந்த முறை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் சில அதிரடி ஷாட்களை ஆட முயற்சி செய்திருந்தார் விராட் கோலி.

இன்னொரு பக்கம் அதிரடி ஆட்டத்தை அவர் ஆடாமல் நிதானமாக ஆடினாலே இந்திய அணிக்கு சிறந்தது தான் என்றும் எதிர்மறையான கருத்துக்களும் கோலியின் பேட்டிங் பற்றி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இது பற்றி பேசி உள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, “விராட் கோலி அதிரடியாக ஆரம்பத்திலேயே விளையாட முயற்சி செய்ததை நீங்கள் கவனித்தீர்கள். அவர் எப்போதும் அப்படி ஆடும் ஒரு பேட்ஸ்மேன் கிடையாது. அப்படி இருந்தும் விராட் கோலி அதிரடியாக ஆடும் நோக்கத்தில் டி 20 போட்டிகளில் முயற்சி செய்தார். அவரைப் போல சஞ்சு சாம்சனும் அதிரடியாக ஆட முயற்சித்து அவுட்டாகி இருந்தார்” என தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

மேலும் டி 20 உலக கோப்பைக்கான அணி குறித்து பேசியிருந்த ரோஹித் ஷர்மா, 8 முதல் 10 வீரர்கள் வரை தயார் செய்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சற்று முன்