- Advertisement 3-
Homeவிளையாட்டுஜெய்ஸ்வால் பத்தி இப்ப எதுவும் பேச விரும்பல.. அதுக்கு இதான் காரணம்.. உண்மையை உடைத்த ரோஹித்..

ஜெய்ஸ்வால் பத்தி இப்ப எதுவும் பேச விரும்பல.. அதுக்கு இதான் காரணம்.. உண்மையை உடைத்த ரோஹித்..

- Advertisement 1-

ரோஹித் தலைமையில் ஐசிசி தொடர்களின் கோப்பைகளை இந்திய அணி தவற விட்டு வந்தாலும் பல இருதரப்பு தொடர்களில் பட்டையை கிளப்பி வருகிறது என்பது தான் உண்மை. ஏதோ ஒரு தவறால் இறுதி போட்டியில் தோற்பதை பலர் விமர்சனம் செய்தாலும் ரோஹித் இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்பதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.

அந்த வகையில், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியை மிக சிறப்பாக வழிநடத்தி வருகிறார் ரோஹித் ஷர்மா. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. அதிலும், இந்திய அணி வென்ற இரண்டு போட்டியிலும் அதிக அனுபவமுள்ள வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை.

பெரும்பாலும் இளம் வீரர்கள் அதிகம் இடம்பெற்றிருந்த நிலையில், அவர்களை சரியாக ஆலோசனைகளை சொல்லி இந்திய அணியை வெற்றி பெறவும் வழிவகுத்தார். அதே போல, இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அவர்கள் டெஸ்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற போட்டியாகவும் மாறி உள்ளது.

இதே போல, ஒரு நாள் போட்டியிலும் முதல் முறையாக ரோஹித் கேப்டன்சியில் தான் இந்திய அணி, 300 க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இப்படி இந்திய அணிக்காக பல சாதனைகளை ரோஹித் ஷர்மா படைத்து வரும் நிலையில், மீதமுள்ள இரண்டு டெஸ்டில் வென்று தொடரை நிச்சயம் அவர் சொந்தமாக்கி விடுவார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

- Advertisement 2-

இந்த நிலையில், சாதனை வெற்றிக்கு பின்னர் பேசியிருந்த ரோஹித் ஷர்மா, “டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டு அல்லது மூன்று நாட்களில் நாம் ஆடக்கூடாது. ஐந்தாவது நாள் வரையாவது தொடர வேண்டும். அவர்கள் சிறந்த ஷாட்களை ஆடி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். ஆனால், நாங்கள் சிறப்பாக பந்து வீசி போட்டியை மாற்றினோம். நெருக்கடிக்கு ஆளாகாமல் அமைதியாக திட்டங்களை செயல்படுத்தியதால் வெற்றி கண்டோம்.

ஜடேஜா ஐந்தாவது வீரராக தனது அனுபவத்தின் மூலம் மிகச்சிறப்பாக ஆடினார். சர்பராஸ் கான் அவரது தரத்துடன் சிறப்பாக ஆடினார். இந்த போட்டியில் நிறைய திருப்புமுனைகள் இருந்தது. இந்தியாவில் ரன்கள் மிக முக்கியம் என்பது தெரியும். அனுபவமில்லாத பந்து வீச்சாளர்கள் இருந்த போதும் நாங்கள் சிறப்பாக ஆடினோம். அவர்களை நினைத்து பெருமையாக உள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் சர்பராஸ் மற்றும் ஜெய்ஸ்வால் உதவியுடன் அதிக ரன்கள் முன்னிலை வைத்தோம். இறுதியில் ஜடேஜாவும் தனது பந்து வீச்சால் முடித்து காட்டினார். நான் ஜெய்ஸ்வாலை பற்றி நிறைய பேசிவிட்டேன். அவர் தனது கிரிக்கெட் பயணத்தில் மிகப்பெரிய உயரத்துடன் தொடங்கி உள்ளதால் நான் இப்போதே அவரை பற்றி அதிகம் பேசவில்லை. அதையே அவர் தொடர வேண்டும் என விரும்புகிறேன்” என ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

சற்று முன்