- Advertisement 3-
Homeவிளையாட்டுஅவன் கெடக்குறான்.. குல்தீப் அவ்ளோ சொல்லியும் கேக்காம ரோஹித் எடுத்த முடிவு.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..

அவன் கெடக்குறான்.. குல்தீப் அவ்ளோ சொல்லியும் கேக்காம ரோஹித் எடுத்த முடிவு.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..

- Advertisement 1-

கிரிக்கெட் போட்டிகளுக்கு மத்தியில் எப்போதும் ஏதாவது ஒரு விஷயம் நடந்து கொண்டே தான் இருக்கும். வழக்கமாக நடைபெறும் விஷயங்களில் இருந்து சற்று மாறுபட்ட வகையில் எதாவது ஒரு நிகழ்வு கிரிக்கெட் அரங்கில் நடக்கும் போது அது மிகப்பெரிய பேசு பொருளாக மாறி, பலரது மத்தியில் அதிக கவனத்தை பெறவும் செய்யும்.

அந்த வகையில், தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் குல்தீப் ஆகியோர் செய்த வேடிக்கையான சம்பவம் ஒன்று தற்போது கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய கிரிக்கெட் அணி, இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி வருகிறது.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடாத போதிலும், 22 வயது இளம் வீரர் ஜெய்ஸ்வால், 200 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார். இதனால் சிறப்பான ஸ்கோரை எட்ட, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியை பும்ராவின் உதவியுடன் கட்டுப்படுத்தி இருந்தது இந்திய கிரிக்கெட் அணி.

இதனையடுத்து, தங்களின் இரண்டாவது இன்னிங்சிலும் ஒரு சில வீரர்கள் தவிர மற்ற அனைவருமே தடுமாற, இத்தனை தொடர்களாக ஃபார்ம் அவுட்டில் இருந்த சுப்மன் கில், சதமடித்து மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். 12 இன்னிங்ஸ்களாக அரைசதம் கூட அடிக்காமல் டெஸ்டில் ஆடி வந்த கில், தற்போது தனது திறனை மீண்டும் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement 2-

இதனால் இங்கிலாந்து அணிக்கும் 399 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி கொடுக்க, அதனை நோக்கி அவர்களும் பேட்டிங் செய்து வருகின்றனர். இரண்டு நாட்கள் மீதமிருக்க, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 332 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 9 விக்கெட்டுகள் இருக்கும் சூழலில், சற்று கடினமாகவும் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதற்கு இடையே, அதிரடியாக ஆடியும் அவர்கள் ரன் சேர்த்து வருகின்றனர்.

அப்படி இருக்கையில், இங்கிலாந்து அணி 2 வது இன்னிங்சில் பேட்டிங் செய்த சமயத்தில் ரோஹித் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஈடுபட்ட நிகழ்வு பற்றிய செய்தியை காணலாம். பும்ரா வீசிய ஓவரில் ஜாக் கிராவ்லி எதிர்கொண்ட பந்து அவரது பேட்டிற்கு அருகே சென்று கீப்பர் பரத் கைக்கு சென்றது. பார்ப்பதற்கு பந்து பேட்டில் பட்டது போல இருந்ததால் இந்திய அணி வீரர்கள் டிஆர்எஸ் எடுக்கும் முடிவில் இறங்கினர்.

அப்போது கேப்டன் ரோஹித், பரத் உள்ளிட்டோர் சற்று உறுதியில்லாமல் இருக்க குல்தீப் யாதவ், நிச்சயம் அவுட் தான் என்றும் டிஆர்எஸ் எடுக்கலாம் என்பது போன்றும் ரோஹித்திடம் கூறியதாக தெரிகிறது. ஆனால், ரோஹித்தோ அதனை பெரிதாக எடுக்காமல், ‘அட இவன் வேற’ என்பது போல குல்தீப்பை நோக்கி சைகை காட்டினார்.

ஆனால், இறுதியில் ரோஹித் நினைத்தது போல அவுட்டில்லை என்பதும் தெரிய வந்ததால், குல்தீப் யாதவ் அவ்வளவு உறுதியாக அவுட் என சொன்னதை குறிப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்