- Advertisement 3-
Homeவிளையாட்டுகம்பீர் பெயருக்கு வேட்டு வைக்கும் ரோஹித்.. கடைசி டெஸ்டில் நடக்க போகும் விஷயம்..

கம்பீர் பெயருக்கு வேட்டு வைக்கும் ரோஹித்.. கடைசி டெஸ்டில் நடக்க போகும் விஷயம்..

- Advertisement 1-

இந்திய அணியை சமீப காலமாக மிகச் சிறப்பாக வழி நடத்துகிறார் கேப்டன் ரோஹித் சர்மா. கடந்த ஆண்டுகள் சில போட்டிகளின் முடிவு இந்தியா பக்கம் இல்லை என்ற போதிலும், அதிலிருந்து தற்போது மீண்டு வந்த இந்திய கிரிக்கெட் அணி, அனைத்து சர்வதேச அணிகளுக்கு எதிராகவும் மிக அற்புதமாக ஆடி வருகிறது. அதிலும் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இளம் வீரர்கள் மட்டுமே உள்ள அணியை வைத்து மிக அற்புதமாக தனது திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் ரோஹித் சர்மா.

இந்த தொடரில் இன்னும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மீதம் இருக்கும் நிலையில் இந்த தொடரை ஏற்கனவே வென்று விட்டது. அவர்கள் அப்படி வென்று விட்டாலும், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணியை சாதாரணமாக விடாமல், வெற்றிக்கான முயற்சிகளை தான் இந்திய அணி வகுத்து அடித்தளம் போடும் என்றும் தெரிகிறது.

ஏற்கனவே இந்த டெஸ்ட் போட்டி அஸ்வினுடைய 100 வது போட்டி என்ற நிலையில் அவரது பவுலிங்கை எதிர்பார்த்தும் ரசிகர்கள் காத்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், அணில் கும்ப்ளேவின் சில முக்கியமான சாதனைகளை அஸ்வின் உடைக்கவும் அவரது 100 வது டெஸ்டில் வாய்ப்புள்ளது. அப்படி இருக்கையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, மிக முக்கியமான ஒரு சாதனையை இந்த போட்டியில் முறியடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர், 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 4,154 சர்வதேச டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளார். மேலும் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 16வது இடத்திலும் அவர் உள்ளார். இதனிடையே ரோஹித் சர்மா 58 டெஸ்ட் போட்டிகளில் 4,035 ரன்கள் அடித்துள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் 120 ரன்களை ரோஹித் சேர்த்தால், கம்பீரை முந்திவிட்டு அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னேற்றம் காணவும் வாய்ப்புள்ளது.

- Advertisement 2-

இதனால் நிச்சயம் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக ஆடி தனது பட்டியலில் ஒரு வீரரை பின்னுக்கு தள்ளி ரோஹித் சாதனை படைப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் குறிப்பிட்டு வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க ஒருவேளை 120 ரன்களை அடுத்த டெஸ்டில் ரோஹித் அடிக்காமல் போனால், ஐபிஎல், டி20 உலக கோப்பைத் தொடர்கள் என அடுத்தடுத்து வருவதால் டெஸ்ட் போட்டியில் ஆடி கம்பீர் சாதனையை உடைக்க நான்கு மாதங்களுக்கு மேல் ரோஹித் காத்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்