- Advertisement -
Homeகிரிக்கெட்பறிபோன ரோஹித்தின் கேப்டன் பதவி.. சிஎஸ்கே பதிவில் மனைவி போட்ட கமெண்ட்.. அந்த எமோஜி தான்...

பறிபோன ரோஹித்தின் கேப்டன் பதவி.. சிஎஸ்கே பதிவில் மனைவி போட்ட கமெண்ட்.. அந்த எமோஜி தான் இப்ப பத்த வெச்சுருக்கு..

-Advertisement-

ஐபிஎல் தொடர் கண்ட சிறந்த கேப்டன் என நிச்சயம் கண்ணை மூடிக் கொண்டு ரோஹித் ஷர்மாவை தேர்வு செய்து விடலாம். அப்படிப்பட்ட ஒரு தலைமை பண்பு நிறைந்த வீரரை திடீரென நீக்கி விட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளது. இது தொடர்பாக மும்பை அணி தரப்பில் அளிக்கப்பட்டிருந்த விளக்கத்தில், இளம் வீரர்களை அடுத்தடுத்த ஐபிஎல் தொடர்களுக்கு தயார் செய்யும் விதமாக, புதிய கேப்டனை நியமித்ததாக குறிப்பிட்டிருந்தது.

சச்சின், ஹர்பஜன் சிங், ரிக்கி பாண்டிங், ரோஹித் ஷர்மா என அடுத்தடுத்து இளம் கேப்டன்களை மாற்றிக் கொண்டே இருந்தது, மும்பை அணியை பலப்படுத்த உதவியதாகவும் அவர்கள் மேலும் விளக்கம் அளித்திருந்தனர். இப்படி பல காரணங்களை மும்பை இந்தியன்ஸ் அணி கொடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள ரோஹித்தின் ரசிகர்கள் தயாராக இல்லை என்றே தெரிகிறது.

சமூக வலைத்தளங்களில் ரோஹித்திற்கு ஆதரவாகவும், மும்பை அணியின் முடிவுக்கு எதிராகவும் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருவதே இதற்கு உதாரணம். மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடி சர்வதேச போட்டியிலும் சிறந்த வீரராக உருவாகி இருந்தார் ஹர்திக் பாண்டியா. பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமை தாங்கி ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக், நேர்காணல் ஒன்றில் மும்பை அணி சிறந்த வீரர்களை எடுத்து தான் கோப்பையை வெல்கின்றனர் என குறிப்பிட, மும்பை ரசிகர்கள் வெகுண்டெழுந்தனர்.

ஹர்திக்கை அவர்கள் அதிகம் விமர்சனமும் செய்ய, தற்போது மீண்டும் மும்பை அணியில் அவர் இணைந்து கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு தான் தற்போது ரோஹித் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி உள்ளது. சமூக வலைத்தளங்களில் மும்பை அணியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே போக, மும்பை அணியில் ஆடி வரும் சூர்யகுமார் யாதவும் மறைமுகமாக ஏதோ சொல்வது போல ஸ்டோரி ஒன்றை பகிர்ந்திருந்தார்.

-Advertisement-

இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோஹித் கேப்டன்சியை பாராட்டி உருக்கமான வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தது. ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி என்றால் ஏதோ போர் நடப்பது போல தான். இதில் ரோஹித் மற்றும் தோனி தான் கேப்டன்களாக மோதி உள்ளனர். அவர்கள் இருவரும் டாஸின் போது இருக்கும் புகைப்படங்களை கொண்டு வீடியோ ஒன்றை சென்னை அணி நெகிழ்ச்சியுடன் வெளியிட்டிருந்தது.

இந்த வீடியோவின் கமெண்டில் மும்பை மற்றும் ரோஹித் ரசிகர்கள், உணர்வுபூர்வமான கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில், ரோஹித் ஷர்மாவின் மனைவியான ரித்திகா சஜ்தே, சென்னை அணியின் பதிவில் மஞ்சள் நிற ஹார்ட் எமோஜியை கமெண்ட் செய்துள்ளார். மஞ்சள் நிறத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதால் சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக அவர் இந்த எமோஜியை குறிப்பிட்டுள்ளார் என்றும் ரசிகர்கள் தெரிவித்தும் வருகின்றனர். மேலும், ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர், அவரது மனைவி ரித்திகா செய்த முதல் கமெண்ட் இது என்றும் தெரிகிறது.

-Advertisement-

சற்று முன்