- Advertisement -
Homeகிரிக்கெட்அவர் இல்லனா தோத்துருப்போம்.. என் ஆட்ட நாயகன் விருதை அவருக்கு கொடுக்கணும்.. மனம் நெகிழ்ந்த சஞ்சு...

அவர் இல்லனா தோத்துருப்போம்.. என் ஆட்ட நாயகன் விருதை அவருக்கு கொடுக்கணும்.. மனம் நெகிழ்ந்த சஞ்சு சாம்சன்..

-Advertisement-

மூன்றாவது நாளில் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக ஐபிஎல் தொடரில் முதல் போட்டி மிக சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்றதும் பேட்டிங்கை தேர்வு செய்த ராஜஸ்தான் அணி, மிக நேர்த்தியாக ஆடி ரன் சேர்த்திருந்தது. கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி இருந்தனர்.

ஆனால், இந்த சீசனின் முதல் போட்டியில் இருவருமே ரன் சேர்க்க முடியாமல் அவுட்டாகினர். இவர்களுக்கு பின்னர் கேப்டன் சஞ்சு சாம்சன், இளம் வீரர் ரியான் பராக்குடன் இணைந்து நல்லதொரு ரன்னை நோக்கி சென்றனர். கடைசி வரை களத்தில் நின்ற சாம்சன், 82 ரன்கள் எடுத்திருந்தார். அவரது பங்களிப்பால் ராஜஸ்தான் அணியும் 20 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி பேட்டிங்கைத் தொடங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே தான் இருந்தது. அப்படி இருந்தும் ராகுல் மற்றும் பூரன் இணைந்து அதிரடியாக ஆடி ரன் சேர்த்ததால், ஒரு சில இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் உருவாகி இருந்தது.

ஆனால், கடைசி ஐந்து ஓவர்களில் ராஜஸ்தான் பந்து வீச்சளர்களான சந்தீப் சர்மா, ஆவேஷ் கான் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் திறம்பட பந்து வீசியதால் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த வெற்றிக்கு பின்னர் ஆட்ட நாயகன் விருதையும் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசுகையில், “மிடில் ஓவர்களில் பேட்டிங் செய்வது எப்போதுமே அற்புதமான ஒரு விஷயம் தான். அதிலும் நீங்கள் போட்டியை வென்றால் அது இன்னும் ஸ்பெஷல் ஆகும்.

-Advertisement-

இந்த முறை எனக்கு வித்தியாசமான ரோல் இருக்கிறது. அதிலும் சில வித்தியாசமான காம்பினேஷன்களும் உள்ளது. சங்கக்காரா சில புதிய யுக்திகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். கடந்த 10 வருடங்களாக ஐபிஎல் ஆடி வரும் நான், அந்த அனுபவத்தின் மூலம் இன்னும் சில நேரம் சூழ்நிலைகளை அறிந்து கொள்ள நேரத்தை செலவிட வேண்டும் என விரும்புகிறேன்.

சர்வதேச அளவில் ஒரு நாள் போட்டிகள் ஆடியதும் எனக்கு பெரிதாக உதவியது. இவை அனைத்தும் உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை பொறுத்து தான் அமைகிறது. முதல் பந்தோ, கடைசி பந்தோ அதை எதிர்த்து ஆட வேண்டும் என்பது தான் என்னுடைய திட்டம். இந்த ஆட்ட நாயகன் கோப்பையை நான் சந்தீப்பிற்கு வழங்க வேண்டும்.

கடைசியில் அந்த 3 ஓவர்களை சந்தீப் வீசியிருக்கவில்லை என்றால், என்னால் நிச்சயம் ஆட்ட நாயகன் விருதை வென்றிருக்க முடியாது. நெருக்கடியான நேரங்களில் சந்தீப்பின் கேரக்டர் மற்றும் பாடி லாங்குவேஜ் அவரை நம்பலாம் என்ற எண்ணத்தை கொடுக்கிறது” என தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்