- Advertisement -
Homeகிரிக்கெட்ஆட்ட நாயகன் விருது வென்ற பின் சஞ்சு சாம்சன் சொன்ன வார்த்தை.. இவருக்கா டீம்ல இடம்...

ஆட்ட நாயகன் விருது வென்ற பின் சஞ்சு சாம்சன் சொன்ன வார்த்தை.. இவருக்கா டீம்ல இடம் கொடுக்காம விட்டீங்க..

-Advertisement-

தெ.ஆ அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் தொடரை வென்று அசத்தி உள்ளது கே எல் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. உலக கோப்பைத் தோல்விக்கு பின்னர் அடுத்தடுத்து வெற்றிகளையும் இந்திய அணி சந்தித்து வருவது ரசிகர்களையும் ஓரளவுக்கு உற்சாகப்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். விராட் கோலிக்கு பிறகு தெ.ஆ மண்ணில் ஒரு நாள் தொடரை வென்ற கேப்டன் என்ற பெருமையும் கேஎல் ராகுலுக்கு கிடைத்துள்ளது.

அவர் இந்திய அணியை தலைமை தாங்கிய கடைசி 12 போட்டிகளில் பதினொன்றில் வெற்றி பெற்றுள்ளது அவரது தலைமை பண்பின் மற்றொரு சிறப்பம்சமாகவும் பார்க்கப்படுகிறது. இதற்கு மத்தியில், தெ. ஆ அணிக்கு எதிரான தொடரில் மற்றொரு அசத்தலான விஷயமும் நடந்துள்ளது. உலக கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அதில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது பெரிய அளவில் விமர்சனத்தை உண்டு பண்ணி இருந்தது.

இதனால் அவர் துவண்டு போகாமல் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள, தற்போது தெ.ஆ அணிக்கு எதிரான தொடரிலும் தேர்வாகி இருந்தார். இதில் நடந்த கடைசி ஒரு நாள் போட்டியில் தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த சஞ்சு சாம்சன், அந்த சிறப்பை பெற்ற முதல் கேரள வீரர் என்ற பெருமையும் உடன் சேர்த்து கொண்டார்.

வெற்றிக்கு பின்னர் ஆட்ட நாயகனாகவும் அவர் தேர்வாக இனி வரும் தொடர்களில் சிறந்த பங்களிப்பை அவர் அளிப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், வெற்றிக்கு பின்னர் ஆட்ட நாயகன் விருது வென்ற மகிழ்ச்சியில் பேசிய சஞ்சு சாம்சன் கூறியதாவது,

-Advertisement-

“மிகவும் பெருமையாக உள்ளது. போட்டியின் முடிவும் சிறப்பாக வந்ததால் கூடுதல் மகிழ்ச்சி. கடந்த இரண்டு மாதங்களாக மட்டுமில்லாமல் தொடர்ந்து உழைத்து வருகிறேன். ஒரு நாள் போட்டியில் பந்து வீச்சாளர்கள் மனநிலையை புரிந்து கொள்ள நமக்கு நிறைய நேரம் கிடைக்கும். அதே போல, டாப் ஆர்டரில் பேட்டிங் செய்வதால் 20 பந்துகள் வரை அதிகம் பேட்டிங் செய்யவும் ஒரு வாய்ப்பு அமையும்.

திலக் வர்மாவை நினைத்து மொத்த நாடே பெருமைப்பட்டது. இன்னும் அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கலாம். இந்திய கிரிக்கெட்டின் தரத்தை சீனியர் வீரர்கள் செட் செய்ய, அதனை பின்பற்றி ஜூனியர் வீரர்களும் தங்கள் பணியை நல்ல முறையில் செய்து வருகின்றனர். இரண்டு, மூன்று நாட்களுக்கு இடையே பயணம் செய்தும் சிறப்பாக ஆடுவது எளிமையான வேலை இல்லை. ஆனாலும் அதனை அவர்கள் சிறப்பாக செய்தனர்” என சஞ்சு சாம்சன் பாராட்டி உள்ளார்.

-Advertisement-

சற்று முன்