- Advertisement 3-
Homeவிளையாட்டுஜெய்ஸ்வாலா.. கில்லா.. இளம் வீரர்களை பற்றி சேவாக் சொன்ன முக்கியமான வார்த்தை..

ஜெய்ஸ்வாலா.. கில்லா.. இளம் வீரர்களை பற்றி சேவாக் சொன்ன முக்கியமான வார்த்தை..

- Advertisement 1-

முன்பெல்லாம் 20 முதல் 25 வீரர்களுக்குள் 15 பேர் கொண்ட இந்திய அணியை ஒரு தொடருக்காக எளிதாக அறிவித்து விடலாம். ஆனால், தற்போது ஐபிஎல் மற்றும் ரஞ்சி கோப்பை உள்ளிட்ட முதல் தர போட்டிகளில் நிறைய இளம் வீரர்கள் அதிக அனுபவம் பெற்ற வீரர்களை போல ஆடி வருவதால் டி 20, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி என எந்த வடிவிலான கிரிக்கெட்டாக இருந்தாலும் அணியை தேர்வு செய்வதிலேயே கடும் போட்டி தான் நிலவி வருகிறது.

அதிலும் குறிப்பாக, இந்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வைத்து நடக்கப் போகும் டி 20 உலக கோப்பையிலும் கூட இந்திய வீரர்கள் தேர்வு எதன் அடிப்படையில் அமைய போகிறது என்பதே பெரிய புதிராக தான் உள்ளது.

அந்த வகையில், தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் கூட சில வீரர்களை மாற்றுவது பற்றியும் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாகவே தெரிவித்தும் வந்தனர். ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வந்ததால் அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே பரவலான கருத்தாக இருந்தது.

அதிலும் 22 வயதே ஆகும் ஜெய்ஸ்வால், முதல் இன்னிங்சில் இரட்டை சதமடித்ததும் 3 வது வீரராக களமிறங்கி வந்த சுப்மன் கில்லுடன் ஒப்பிட்டு மற்ற வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் கில்லுக்கு பதிலாக ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக களமிறக்கலாம் என்ற அளவுக்கு கருத்துக்கள் பரவத் தொடங்கின. இதனிடையே, இரண்டாவது இன்னிங்சில் மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் குறைவாக ரன்கள் அடிக்க, கில் பல இன்னிங்ஸ்களுக்கு பிறகு டெஸ்டில் அரைசதம் கடந்ததுடன் அதனை சதமாகவும் மாற்றி இருந்தார்.

- Advertisement 2-

பலரும் விமர்சித்த கில்லும் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதால் ஜெய்ஸ்வாலா அல்லது கில்லா என்ற அளவுக்கு போட்டியும் தீவிரமானது. இந்த நிலையில், இந்த இரண்டு வீரர்களை பற்றியும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் சில கருத்துக்களை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

“25 வயதிற்குட்பட்ட இரண்டு இளைஞர்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் உயர்ந்து நிற்பதை காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்த இரண்டு பேருமே உலக கிரிக்கெட்டில் அப்படி ஒரு ஆதிக்கம் செலுத்த போகிறார்கள்” என உறுதியுடன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே டெஸ்டில் ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்திற்கு பலரும் சேவாக்குடன் ஒப்பிட்டு கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், தற்போது அவரே அந்த இளம் வீரர் பற்றி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்