- Advertisement 3-
Homeவிளையாட்டு200 ரன் அடிச்சும் டீம்ல இடமில்ல.. சீனியர் வீரருக்கு செக் வைத்த இந்திய அணி.. என்னதாங்க...

200 ரன் அடிச்சும் டீம்ல இடமில்ல.. சீனியர் வீரருக்கு செக் வைத்த இந்திய அணி.. என்னதாங்க உங்க பிரச்சனை

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி, உலக கோப்பை தொடர் நடந்தது முதலே தொடர்ந்து பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் ஆடி வருகிறது. ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட அணிகளை எதிர்கொண்டதுடன் மட்டுமில்லாமல் அனைத்து தொடர்களில் வெற்றியின் ரூட்டே எடுத்திருந்தது இந்திய கிரிக்கெட் அணி. இதே பாதையை ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பை வரை கடைபிடித்து கடந்த முறை தவற விட்ட கோப்பையை இந்த முறை அவர்கள் கைப்பற்ற வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

அப்படி இருக்கையில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடையேயான டி 20 தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. மீதமுள்ள இரண்டு போட்டிகள், வரும் ஜனவரி 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த தொடர் முடிவடைந்ததும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பமாகிறது. ஜனவரி 25 ஆம் தேதி முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ள நிலையில், இரு அணிகளுக்குமே மிக முக்கியத்துவம் வாய்ந்த தொடராக இது பார்க்கப்படுகிறது. இந்திய மண்ணில் இந்த தொடர் நடந்திருந்த நிலையில், இதற்கு முன்பு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவி இருந்தது.

இதனால் இந்த முறை அதற்கு பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இங்கிலாந்து அணி களமிறங்கும். அதே வேளையில், இரு அணிகளுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கிலும் தீவிரமாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement 2-

இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் ரோஹித் ஷர்மா கேப்டனாக உள்ள சூழலில், சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களும், கே எல் ராகுல், கேஎஸ் பரத், துருவ் ஜூரேல் ஆகிய விக்கெட் கீப்பர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல, நீண்ட நாட்களுக்கு பிறகு டெஸ்ட் அணியில் ஆல் ரவுண்டர் அக்சர் படேல் இடம்பிடித்துள்ளார். ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இரண்டு பேருமே இருப்பதால் அக்சருக்கான வாய்ப்பு எப்படி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த நிலையில், இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தேர்வாகாமல் போன வீரர் பற்றி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி தொடரில் இந்திய அணியின் சீனியர் புஜாரா ஆடி வருகிறார். இவர் முதல் போட்டியிலேயே 200 ரன்களை அடித்து கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்த போதிலும் அவரை இந்திய அணி தேர்வு செய்யாமல் விட்டுள்ளது. ரஞ்சி தொடர் நடந்து வந்தாலும் இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைத்தால் புஜாராவுக்கு சிறந்த கம்பேக்காக தான் இருந்திருக்கும். ஆனால், அது நடக்காமல் போனது தான் தற்போது கேள்விகளை எழுப்பி உள்ளது. இதற்கிடையில், மீதமுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடிக்கலாம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம் : ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே எல் ராகுல், பரத், துருவ் ஜூரேல், அக்சர் படேல், ரவி அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், பும்ரா, ஆவேஷ் கான்

சற்று முன்