- Advertisement -
Homeகிரிக்கெட்கடைசி ஓவர்ல இப்படி தான் பிளான் பண்ணி ஜெயிச்சேன்.. ஷ்ரேயஸ் ஐயர் போட்ட ஸ்கெட்ச்.. கொல்கத்தா...

கடைசி ஓவர்ல இப்படி தான் பிளான் பண்ணி ஜெயிச்சேன்.. ஷ்ரேயஸ் ஐயர் போட்ட ஸ்கெட்ச்.. கொல்கத்தா வெற்றியின் பின்னணி..

-Advertisement-

இந்த ஐபிஎல் சீசனில் முதல் முறையாக கொல்கத்தா அணி தான் ஹைதராபாத் அணிக்கு எதிராக 200 ரன்களை கடந்திருந்தது. முதல் இரண்டு போட்டிகளில் 170 முதல் 180 ரன்களே இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி இருந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி விக்கெட்டுகளில் இருந்து தடுமாறிய நேரத்தில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் அரைசதம் அடித்து பட்டையை கிளப்பினார்.

மிடில் ஆர்டரில் வந்த ரசல் பந்துகளை சிக்ஸருக்கு விரட்டி அணியின் ரன்னையும் ஜெட் வேகத்தில் உயர்த்தினார். அதனால் இருபது ஓவர்கள் முடிவில் 208 ரன்களை கொல்கத்தா அணி எடுக்க கடினமான இலக்கை நோக்கி ஹைதராபாத் அணி ஆடியது. அவர்களும் விக்கெட்டுகள் இருந்து தடுமாறிய சூழலில் தான் கடைசி கட்டத்தில் சிக்ஸர்களை கிளாஸன் பறக்க விட கடைசி பந்தில் 4 ரன்களில் வெற்றியை தவறவிட்டது ஹைதராபாத்.

போட்டி கொல்கத்தா பக்கம் இருந்தபோதிலும் கடைசி இரண்டு ஓவர்களில் போட்டியை கிளாஸன் மாற்றியதால் கொல்கத்தா ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போயினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் பேசிய கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், “17 வது ஓவர் முதல் எனது வயற்றில் பட்டாம்பூச்சி பறக்க ஆர்மபித்து விட்டது.

கடைசி ஓவரில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என தோன்றியது. கடைசி ஓவரில் ஹைதராபாத்திற்கு 13 ரன்கள் வேண்டும் என்ற நிலை இருந்த போது எங்களிடம் அனுபவமுள்ள பந்து வீச்சாளரும் இல்லை. ஆனால், எனக்கு ஹர்ஷித் ராணா மீது நம்பிக்கை இருந்தது.

-Advertisement-

என்ன நடந்தாலும் பிரச்சனை இல்லை என அவரிடம் கூறி பதற்றத்துடன் வந்த அவரை தேற்றினேன். ரசல் மற்றும் நரைன் ஆகியோர் அந்த அளவுக்கு அனுபவம் வாய்ந்தவர்கள். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ரசல் கலக்கியது சிறப்பாக இருந்தது. நரைனும் சிறப்பாக பந்து வீசி இருந்தார். எப்போதும் நீங்கள் வெற்றியுடன் தொடங்கினால் அது உங்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.

இந்த போட்டியில் நாங்கள் கற்றுக் கொண்டுள்ள நிறைய விஷயங்களை அடுத்த போட்டிகளில் எடுத்து செல்கிறோம். எங்களுடைய ஃபீல்டிங்கில் இன்னும் நாங்கள் மேம்பட வேண்டும் என நினைக்கிறேன். மைதானத்தில் சத்தம் அதிகமாக இருந்ததால் டீப்பில் நிற்கும் ஃபீல்டர்களை கத்தி சரி செய்வதே சிரமமாக இருந்தது” என ஷ்ரேயஸ் ஐயர் கூறி உள்ளார்.

-Advertisement-

சற்று முன்