- Advertisement -
Homeகிரிக்கெட்இந்த மேட்ச் தோத்தது வருத்தமில்ல.. அவருகிட்ட இருந்து நிறைய கத்துக்கணும்.. ஷ்ரேயஸ் ஐயர் வெளிப்படை..

இந்த மேட்ச் தோத்தது வருத்தமில்ல.. அவருகிட்ட இருந்து நிறைய கத்துக்கணும்.. ஷ்ரேயஸ் ஐயர் வெளிப்படை..

-Advertisement-

நடப்பை தொடரில் மற்றொரு சிறந்த போட்டி தான் தற்போது நடந்து முடிந்துள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் ருத்ரதாண்டவத்தை பார்த்து அனைத்து அணிகளுமே மிரண்டு போய் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அணிக்காக இங்கிலாந்து அணி அதிரடி வீரர் பேர்ஸ்டோ, ஐபிஎல் தொடரில் ஃபார்முக்கு வராமல் இருந்துவரும் நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தாறுமாறாக விளையாடி பந்துகளை சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்களுக்கு மட்டும் தான் பறக்க விட்டிருந்தார்.

முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்திருந்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்திருந்தது. ஐபிஎல் வரலாற்றில் அவர்களின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவான நிலையில் சால்ட் மற்றும் நரைன் ஆகியோரின் அதிரடி தொடக்கம், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோரின் பங்களிப்பு என அனைத்தும் நன்றாக அமைந்தால் அவர்கள் இந்த ஸ்கோரை எட்டி இருந்தனர்.

வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, சுனில் நரைன் என பந்து வீச்சிலும் பலர் பலமாக இருப்பதால் அவர்கள் எளிதாக வெற்றி பெற்று விடுவார்கள் என்று தான் கருதினர். ஆனால் திறம்பட இருந்த கொல்கத்தா அணியை மிக சாதாரணமாக கையாண்டு இருந்தது பஞ்சாப். அந்த அணியின் தொடக்க வீரர் பேர்ஸ்டோ சதமடிக்க இளம் வீரர் ப்ரப்சிம்ரன் சிங், 20 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். நான்காவது வீரராக வந்த சஷாங்க் சிங் அதிரடி காட்ட 18 வது ஓவரிலேயே 8 பந்துகள் மீதம் வைத்து ஐபிஎல் தொடரில் அதிக ஸ்கோரை சேசிங் செய்த அணி என்ற பெருமையையும் பெற்றிருந்தது.

கொஞ்சம் கூட எதிர்பாராத தோல்விக்கு பின் பேசியிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், “இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் ஆடிய விதம் மிக அபாரமாக இருந்தது. நாம் என்ன நினைத்தோமோ அதனையே அவர்கள் அணிக்காக செய்து கொடுத்தார்கள். இரு அணிகளும் மிக மிக அபாரமாக ஆடி இருந்தது.

-Advertisement-

போட்டிக்கு பின்னர் மீண்டும் டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று போட்ட திட்டங்களில் எது தவறாக நடந்தது என்பதை பார்க்க வேண்டும். இந்த இலக்கை வெற்றியாக மாற்ற முடியாமல் போனது வேதனை அளிக்கவில்லை. ஆனால் வீரர்களுக்கு இது ஒரு சிறந்த பாடமாக அமைந்தது. நரேன் தொடக்க வீரராக சென்று பந்தினை அடித்து ஆடுவதை பார்க்க மிக அற்புதமாக உள்ளது. அவரிடமிருந்தே நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. எங்கள் அணியின் மிகப்பெரிய மதிப்புள்ள வீரரே அவர்தான்” என தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்