- Advertisement 3-
Homeவிளையாட்டுஎந்த குறையும் இல்லாத டீம் நாங்க.. ஸ்டார்க், ரசல் மேஜிக் செஞ்சுட்டாங்க.. ஷ்ரேயஸ் ஐயர் பெருமிதம்..

எந்த குறையும் இல்லாத டீம் நாங்க.. ஸ்டார்க், ரசல் மேஜிக் செஞ்சுட்டாங்க.. ஷ்ரேயஸ் ஐயர் பெருமிதம்..

- Advertisement 1-

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் வருவதற்கு முன்பாக ஏராளமான விமர்சனங்கள் அவரை சுற்றி உருவாகி இருந்தது. இந்திய அணிக்காக வேண்டுமென்றே தொடர்களில் ஆடாமல் இருந்தது, காயம் எனக் கூறிக்கொண்டு முதல் தர கிரிக்கெட்டில் ஆடாமல் இருந்தது, அவரது ஃபார்ம் அவுட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பெரிய அளவில் கேள்வி எழுப்பியிருந்ததால் அவரது பெயர் இந்திய அணியின் வருடாந்திர சம்பள பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டிருந்தது.

இப்படி பல்வேறு குழப்பத்திற்கு மத்தியில் கொல்கத்தா அணியின் கேப்டனாக கால் பதித்த ஷ்ரேயஸ் ஐயர் ஐந்தாவது இந்திய வீரராக ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன் என்ற பெருமையும் பெற்றுள்ளார். கம்பீர், அபிஷேக் நாயர் மற்றும் பரத் அருண் ஆகியோருடன் இணைந்து மிகச் சிறப்பான கேப்டன்சி தனது வீரர்களை வைத்து வழி நடத்தி வந்த ஷ்ரேயஸ் ஐயர், எப்படிப்பட்ட அணியாக இருந்தாலும் எந்தவித நெருக்கடியும் இன்றி மிக சிறப்பாக எதிர்கொண்டிருந்தார்.

இவை இறுதிப் போட்டியிலும் ஹைதராபாத் அணிக்கு எதிராக பிரதிபலிக்க, 113 ரன்களில் அவர்களை சுருட்டி மூன்றாவது முறையாக கொல்கத்தா அணி கோப்பையை வெல்லவும் உதவியாக இருந்தது. இதனிடையே ஐபிஎல் கோப்பையை மூன்றாவது முறையாக வென்றதற்கு பின் பேசியிருந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், “நாங்கள் அணி வீரர்களிடம் இருந்து என்ன எதிர்பார்த்தோமோ அது தற்போது கிடைத்து விட்டது. அப்படிப்பட்ட இந்த தருணத்தை என்னால் விவரிப்பதே மிக கடினமாக உள்ளது. இந்த சீசன் முழுக்க எங்களை வெல்ல முடியாதது போல் தான் நாங்கள் ஆடி இருந்தோம்.

மேலும் தற்போதைய ஒவ்வொரு விஷயங்களையும் நினைத்து பெருமைப்படவும் நிறைய உள்ளது. முதல் போட்டியில் இருந்து அபாரமாக செயல்பட்டதால் நாங்கள் தற்போது இந்த அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த இடத்தில் வந்து நிற்கிறோம்.

- Advertisement 2-

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இந்த சீசன் முழுக்க நல்ல ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி இருந்தனர். நாங்கள் முதலில் பந்து வீசியது அதிர்ஷ்டமாக இருந்ததுடன் மட்டும் இல்லாமல் அனைத்துமே எங்கள் பக்கம் சாதகமாக இருக்கவும் உதவி செய்திருந்தது.

ஸ்டார்க் போன்ற ஒருவர், அதிக நெருக்கடி இருக்கும் இது போன்ற போட்டிகளில் தான் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அவர் தனது பந்துவீச்சில் ஒரு முறையும் மெத்தனத்தை காட்டாமல் சரியான நேரத்தில் சரியான பந்துவீச்சாளராக களமிறங்கி மேஜிக்கை செய்திருந்தார். ரசலிடம் ஏதோ மந்திரக்கோல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

அவர் அந்த அளவுக்கு தான் விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். அனைத்து வீரர்களும் சரியான நேரத்தில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எந்த குறையும் இல்லாத ஒரு சீசனாகவும் இந்த முறை எங்களுக்கு மாற்றி உள்ளனர்” என ஷ்ரேயஸ் ஐயர் கூறியுள்ளார்.

சற்று முன்