- Advertisement 3-
Homeவிளையாட்டு100 அடிச்சாலும் அப்பா அந்த ஒரு தப்புக்காக திட்டுவாரு.. வெளிப்படையாக சொன்ன கில்..

100 அடிச்சாலும் அப்பா அந்த ஒரு தப்புக்காக திட்டுவாரு.. வெளிப்படையாக சொன்ன கில்..

- Advertisement 1-

முன்பெல்லாம் குறைந்த ஓவர் போட்டிகளில் இளம் வீரர்கள் அதிகம் இடம்பெற்று வந்த நிலையில், சமீபகாலமாக இந்திய டெஸ்ட் அணியிலும் கூட அதிகமாக இடம்பிடிக்க தொடங்கி விட்டனர். அதே போல, டெஸ்ட் போட்டிகள் என்றாலே நிதானமாக ஆடி குறைந்தபட்சம் நான்காவது நாள் வரைக்கும் ஆவது போட்டிகள் விறுவிறுப்பாகவும், நேர்த்தியாகவும் சென்று கொண்டிருக்கும்.

ஆனால், இளம் வீரர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அவர்கள் டி 20 போட்டிகளை போல டெஸ்டிலும் ஆட நினைத்து வேகமாக அவர்களின் விக்கெட்டுகளை பறிகொடுக்கிறார்கள். இதனால் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களின் பேட்டிங் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு தான் வருகிறது.

அதிலும் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் தாண்டுவதிலும் கூட அந்த அளவுக்கு தடுமாற்றம் இருந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் கூட, அவர்கள் சிறப்பாக ஆடாமல் போனது தான் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சிலும் கூட அவர்கள் ஆடாத சூழலில், மற்றொரு இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து இந்திய அணியை மீட்டிருந்தார். இதனிடையே, 12 இன்னிங்ஸ்களாக டெஸ்டில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்து வந்த கில், இதே போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சதமடித்து இங்கிலாந்து அணிக்கு சற்று கடின இலக்கை நிர்ணயிக்கவும் காரணமாக இருந்தார்.

- Advertisement 2-

இத்தனை நாட்கள் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கூட கில்லின் பேட்டிங்கை விமர்சித்த சூழலில் இந்த சதத்தின் மூலம் ஓரளவுக்கு விமர்சகர்களின் வாயையும் அவர் மூடி உள்ளார். இந்த நிலையில், இந்த சதத்திற்கு பின்னர் பேசி இருந்த சுப்மன் கில், “இந்த சதத்தால் நான் மகிழ்ச்சி அடைந்தாலும் நான் அவுட்டான விஷயத்தில் தவறுகள் செய்து விட்டேன். இன்னும் ஒரு சில ஓவர்கள் நான் ஆடி இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

சுப்மன் கில் கிரிக்கெட் ஆடுவதற்கு மிக பெரிய ஆதரவாக இருக்கும் அவரது தந்தை, மகனின் போட்டிகளை காண நேராக மைதானத்திற்கே வந்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இது பற்றி பேசிய கில், “நான் அவுட்டான ஷாட்டிற்கு நிச்சயம் என் தந்தை கோபப்படுவார் என நினைக்கிறேன். அவர் பெரும்பாலும் எனது போட்டிகளை காண மைதானத்திற்கு வந்து விடுவார்.

தற்போது சுமார் 70 சதவீதம் வரை வெற்றி வாய்ப்பு எங்கள் பக்கம் இருப்பதாகவே கருதுகிறேன். அடுத்த தினத்தில் முதல் ஒரு மணி நேரம் முக்கியமாக இருப்பதுடன் பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச்சில் உள்ள ஈரம் கைகொடுக்கும் என்றே நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்