- Advertisement 3-
Homeவிளையாட்டு2ஆம் வகுப்பு படிக்கிறவன் கூட இந்த தவறை செய்ய மாட்டான்..சுப்மன் கில்லால் தோற்ற இந்தியா!

2ஆம் வகுப்பு படிக்கிறவன் கூட இந்த தவறை செய்ய மாட்டான்..சுப்மன் கில்லால் தோற்ற இந்தியா!

- Advertisement 1-

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி தொடரை மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் இழந்தது.இதன் மூலம் தொடர்ந்து 11 முறை இருதரப்பு தொடர்களை வென்ற இந்திய அணிக்கு இது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. ஆனால் இதைவிட பெரிய அதிர்ச்சி அதன் பிறகு தான் காத்திருந்தது.

ஏனென்றால் கில்,அதில் ஆட்டம் இழந்தது அவுட்டே கிடையாது என ரீப்ளேவில் தெரிய வந்தது. காலில் பட்ட பந்துக்கு நடுவர் அவுட் கொடுக்க கில்லும் அதனை ஏற்றுக் கொண்டு சென்றுவிட்டார். இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட நீ தவறு செய்து விட்டாய் என்றால் நான் அது செய்யவே இல்லை என்று எதிர்த்து கேள்வி கேட்பான்.

ஆனால் அவுட் என நடுவர் கொடுத்தவுடன் அதனை எதிர்த்து ரிவ்யூ செய்ய இரண்டு வாய்ப்பு இருந்தும் அப்படியே பெவிலியன் நோக்கி சென்றுவிட்டார். ரீப்ளேவில் தான் பந்து ஸ்டெம்பில் படாமல் சென்றிருக்கும் என கணிக்கப்பட்டது.

- Advertisement 2-

இதனை அடுத்து ரிவ்யூவை பயன்படுத்தாமல் கில் வீணடித்து விட்டார். இதன் காரணமாக இந்திய அணிக்கு மோசமான தொடக்கமாக அமைந்தது. கில் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி நல்ல பார்மில் இருந்ததால், இன்றைய ஆட்டத்திலும் நிச்சயம் ஒரு 20,30 ரன்கள் கூட அடித்து இருந்தாலே இந்திய அணிக்கு அது பெரும் சாதகமாக அமைந்திருக்கும்.

இப்படி இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து சில சில தவறுகளை செய்து வருவதால் தான் உலகக்கோப்பைக்கே தகுதி பெறாத ஒரு அணியுடன் இந்தியா தோல்வியை தழுவியிருக்கிறது என்று விமர்சனம் எழுந்துள்ளது. தற்போது கில் தொடர்ந்து ஒரு மாதம் ஓய்வில் இருக்க உள்ளார்.

அதன் பிறகு தான் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறார் இந்த தருணத்தில் இந்திய அணி அயர்லாந்துக்கு சென்று மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 19 தொலைக்காட்சிகளில் பார்க்கலாம்.

சற்று முன்