- Advertisement 3-
Homeவிளையாட்டுகில் சதமடிச்சாலும் எனக்கு அந்த ஒரு விஷயத்துல விருப்பமில்ல.. ஊரே கொண்டாடியும் விரக்தியில் கில்லின் தந்தை..

கில் சதமடிச்சாலும் எனக்கு அந்த ஒரு விஷயத்துல விருப்பமில்ல.. ஊரே கொண்டாடியும் விரக்தியில் கில்லின் தந்தை..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாக சில இந்திய வீரர்கள் மீது அதிகமாக விமர்சனங்கள் இருந்து வந்தது. இளம் வீரர்களான சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரைச்சதம் கூட அடிக்காமல் பல இன்னிங்ஸ்களை ஆடி வந்தனர்.

புஜாரா, ரஹானே உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தொடர்ந்து இளம் வீரர்களை நம்பி இருப்பது இந்திய அணிக்கு சிக்கலாக அமையும் என்றும் குறிப்பிட்டு வந்தனர். அவர்கள் சொன்னது முதல் இரண்டு டெஸ்டில் சரியாக இருந்தது. ஷ்ரேயஸ் ஐயர் இரண்டு போட்டியிலும் சொதப்ப, மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கான அணியில் இடம்பெறாமலும் விலகி இருந்தார்.

ஆனால் அதே வேளையில் மறுபுறம் கில்லுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்க இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் அரைச்சதமாக மாற்றியிருந்த சுப்மன் கில் தற்போது கடைசி டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஒருமுறை சதம் அடித்து தான் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் சிறந்த பிளேயர் என்பதை நிரூபித்துள்ளார்.

தன் மீதான விமர்சனங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ள கில், இதே ஃபார்மை வருங்காலத்திலும் தொடர்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த போட்டியில் ஆண்டர்சன் வேகப்பந்தில் இறங்கி வந்து கில் அடித்த சிக்சர் ஷாட், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் மிரண்டு பார்க்க வைத்திருந்தது.

- Advertisement 2-

அவர் சதம் அடித்திருந்தபோது தன் மகன் பெரிய கிரிக்கெட் வீரராக வேண்டும் என கனவு கண்ட கில்லின் தந்தை மைதானத்தில் இருந்து அதனை கொண்டாடியிருந்ததும் கிரிக்கெட் போட்டியின் ஒரு முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மகனின் சதம் பற்றி கில்லின் தந்தையும் அவரது சிறு வயது பயிற்சியாளருமான லக்விந்தர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“கில் இறங்கி வந்து இதுபோன்ற சிக்ஸர் அடிப்பது மிகப்பெரிய வித்தியாசத்தை உண்டு பண்ணும். U 16 போட்டிகளில் இருந்து அவர் இது போன்று ஸ்பின்னர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இறங்கி வந்து ரன்னை அடித்துள்ளார். உங்களின் இயற்கையான ஆட்டத்தை எப்போது ஆடுவதை மாற்றுகிறீர்களோ அப்போது நீங்கள் நெருக்கடிக்கும் உள்ளாகலாம். உங்களின் தன்னம்பிக்கையை பொறுத்து தான் உங்களது மொத்த ஆட்டமும் தீர்மானிக்கப்படுகிறது” என கூறினார்.

கில் சதம் அடித்த போதிலும் தனக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை பற்றியும் லுக்விந்தர் தெரிவித்துள்ளார். “கில் தொடர்ந்து தொடக்க வீரராக தான் ஆட வேண்டும் என நான் நினைக்கிறேன். அவர் மூன்றாவது வீரராக ஆடுவது எனக்கு சரியாக படவில்லை. நீங்கள் டிரெஸ்ஸிங் ரூமில் தொடர்ந்து இருக்கும் போது உங்கள் மீதான நெருக்கடியும் அதிகமாகலாம்.

இதனால் அதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் எனது மகனுடைய முடிவில் நான் தலையிடமாட்டேன். நான் அவருக்கு பயிற்சி அளித்து இருந்தாலும் தற்போது அவரே முடிவை எடுக்கும் ஒரு முதிர்ச்சியை அடைந்து விட்டார்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்