- Advertisement 3-
Homeவிளையாட்டுகில் சதமடிச்சதும் சச்சின் டெண்டுல்கர் கொடுத்த ஸ்பெஷல் மெசேஜ்.. இணையத்தில் டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்..

கில் சதமடிச்சதும் சச்சின் டெண்டுல்கர் கொடுத்த ஸ்பெஷல் மெசேஜ்.. இணையத்தில் டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்..

- Advertisement 1-

பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரரின் பயணத்தில் எந்த அளவுக்கு அவர் ஏறுமுகம் காண்கிறார்களோ, அந்த அளவுக்கு தடைகளையும் நிச்சயம் சந்திக்க வேண்டி வரும். ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த விராட் கோலி கூட நடுவே இரண்டு ஆண்டுகள் கடும் தடுமாற்றத்தை கொண்டிருந்தார். இதனால், அவருக்கு பதிலாக அடுத்த தலைமுறை இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூட பலர் விமர்சித்தனர்.

ஆனால் இதை எல்லாம் தவிடு பொடியாக்கிய கோலி, மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்ப வந்து இன்று இளம் வீரர்களுக்கே போட்டி கொடுக்கும் அளவிற்கு பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில், 24 வயதே ஆகும் இளம் வீரர் சுப்மன் கில், கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர், ஒரு நாள் தொடர் மற்றும் டி 20 போட்டிகளில் பட்டையை கிளப்பி ஐசிசி விருதுகளையும் கூட வென்றிருந்த சுப்மன் கில், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து பல போட்டிகளாக சொதப்பி வந்தார்.

அதே போல, சில போட்டிகளில் கில் உட்பட சில இளம் வீரர்களின் பேட்டிங் எடுபடாததன் காரணமாக இந்திய அணி தோல்வி அடையும் நிலை கூட உருவாகி இருந்தது. பல எதிர்ப்புகளையும் இதன் பெயரில் சம்பாதித்திருந்த கில், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் சதமடித்து தனது பேட்டிங்கில் செய்த சில தவறுகளை சரி செய்தும் கொண்டுள்ளார்.

இதனால், மற்ற வடிவிலான கிரிக்கெட் போட்டிகளை போல டெஸ்டிலும் நிச்சயம் எதிரணியினருக்கு சவாலான வகையில் இருக்கும் பேட்டிங்கை தொடர்ந்து அவர் வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. அது மட்டுமில்லாமல், இரண்டாவது இன்னிங்சில் கில்லின் சதத்தின் உதவியுடன் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் என்ற சற்று கடினமான இலக்கையும் நிர்ணயிக்க முடிந்தது.

- Advertisement 2-

முன்பு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடாததால் கில்லை விமர்சித்த பலரும் கூட தற்போது அவரை பாராட்டி இதே வரிசையில் பல இன்னிங்ஸ்களை ஆட வேண்டும் என்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் கூட நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு அச்சுறுத்தலாக சுப்மன் கில்லின் பேட்டிங் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படுபவருமான சச்சின் டெண்டுல்கர், கில் இன்னிங்ஸை பாராட்டி சில கருத்துக்களைத் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது பதிவில், “சுப்மன் கில்லின் இந்த இன்னிங்ஸ் முழுக்க முழுக்க திறமை வாய்ந்தது. சரியான நேரத்தில் நூறு ரன்களைத் தொட்டதற்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்