- Advertisement -
Homeகிரிக்கெட்89 ரன்னில் ஆல் அவுட்.. அப்படி நடந்தா ஒரு வேளை நாங்க ஜெயிச்சுருப்போம்.. இதை மறந்துடணும்.....

89 ரன்னில் ஆல் அவுட்.. அப்படி நடந்தா ஒரு வேளை நாங்க ஜெயிச்சுருப்போம்.. இதை மறந்துடணும்.. விரக்தியில் கில்..

-Advertisement-

2022 ஆம் ஆண்டு புதிதாக அறிமுகமான ஐபிஎல் அணிகளில் ஒன்று தான் குஜராத் டைட்டன்ஸ். இந்த அணியை கடந்த இரண்டு சீசன்களில் ஹர்திக் பாண்டியா வழி நடத்தி வந்த நிலையில் அவர் மும்பை அணியில் மீண்டும் இணைந்து கேப்டனாக மாறி இருந்ததால் குஜராத் அணியை தலைமை தாங்கும் வாய்ப்பு இளம் வீரரான சுப்மன் கில்லிற்கு கிடைத்திருந்தது.

இந்திய அணியில் மிகச்சிறப்பாக அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடிவரும் சுப்மன் கில், குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக தான் ஆரம்பத்தில் வழி நடத்தி வந்திருந்தார். அந்த அணியில் டேவிட் மில்லர், வில்லியம்சன், ரஷீத் கான், ராகுல் தெவாட்டியா, சஹா, சாய் சுதர்சன் என ஏராளமான வீரர்கள் இருந்தும் இந்த தொடரில் அவர்களது பயணம் ஒரு ரோலர் கோஸ்டர் ரைடாக தான் இருந்து வருகிறது.

முதல் போட்டியை வென்றிருந்த குஜராத் அணி, அடுத்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது. மூன்றாவது போட்டியில் மீண்டும் வெற்றி பெற்றிருந்த குஜராத் அணி, நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டியில் தோல்வியடைந்திருந்தது. இதற்கிடையே ராஜஸ்தான் அணிக்கு எதிராக கடைசியில் த்ரில் வெற்றி பெற்றிருந்த குஜராத் அணி ஆறு போட்டிகளில் மூன்றில் வெற்றியும், மூன்றில் தோல்வியும் கண்டிருந்தது.

அப்படி ஒரு சூழலில் தங்களின் ஏழாவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை அவர்கள் எதிர் கொண்டிருந்தனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 89 ரன்களில் 18 வது ஓவரிலேயே ஆல் அவுட்டாகி இருந்தது. ஐபிஎல் தொடரில் குஜராத்தின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாக மாறி உள்ள நிலையில் நடப்பு சீசனின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

இதற்கிடையே இலக்கை நோக்கி ஆடி இருந்த டெல்லி அணி ஐந்தாவது ஓவரிலேயே 65 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. இறுதியில், 9 வது ஓவரில் இலக்கை எட்டிய டெல்லி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 6 வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்த தோல்விக்கு பின் மிகவும் விரக்தியில் பேசியிருந்த குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில், “எங்களின் பேட்டிங் மிக மிக ஏவரேஜாகத்தான் இருந்தது. இந்த போட்டியில் இருந்து வேகமாக மாறி அடுத்த போட்டியில் பழைய மனநிலையுடன் வந்து கம்பேக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். பிட்ச் நன்றாகத்தான் இருந்தது. நான், சஹா மற்றும் சாய் சுதர்சன் அவுட்டான போது அதனை பிட்சுடன் ஒப்பிட்டு குறை கூறுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

எதிரணியினர் 89 ரன் என்ற ரன்னை நோக்கி சேஸ் செய்யும் போது நமது அணி பந்து வீச்சாளர்கள் இரண்டு ஹாட்ரிக் எடுத்தால் மட்டும் தான் வெற்றியை பற்றி சிந்திக்க முடியும். இல்லை என்றால் வெற்றி பெறவே முடியாது. லீக் சுற்றின் பாதி போட்டிகள் நடந்து முடிந்துள்ளதில் நாங்கள் மூன்றில் வென்றுள்ளோம். நிச்சயமாக மீதம் உள்ள போட்டிகளில், முந்தைய சீசன்களை போல ஐந்து முதல் ஆறு போட்டிகள் வென்று வருவோம்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார் கில்.

-Advertisement-

சற்று முன்