- Advertisement 3-
Homeவிளையாட்டுஅடேங்கப்பா.. 102 வருச டெஸ்ட் மேட்ச்ல 2 வது தடவை இப்படி நடக்குது.. இந்தியாவுக்காக இங்கிலாந்து...

அடேங்கப்பா.. 102 வருச டெஸ்ட் மேட்ச்ல 2 வது தடவை இப்படி நடக்குது.. இந்தியாவுக்காக இங்கிலாந்து போட்ட ஸ்கெட்ச்..

- Advertisement 1-

இங்கிலாந்து அணியை எதிர்த்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடி இருந்த இந்திய அணிக்கு ஆபத்பாந்தவனாக விளங்கி இருந்தார் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் ஆரம்பத்தில் இருந்தே நேர்த்தியாக ஆடி ரன் சேர்க்க, இன்னொரு புறம் வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

ஆனாலும் அதை நினைத்து அலட்டிக் கொள்ளாமல், பவுண்டரிகளை பறக்க விட்ட ஜெய்ஸ்வால், 150 ரன்கள் கடந்து பட்டையை கிளப்பி உள்ளார். ரோஹித் ஷர்மா, கில், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் ஆண்டர்சன், பஷீர் என இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களைக் கண்டு திணறிய போது நான் பார்த்துக்கறேன் என்ற ரேஞ்சில் ஒரு மாஸ் இன்னிங்ஸ் ஆடி வரும் ஜெய்ஸ்வால், இரண்டாவது நாளில் 200 ரன்கள் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்திரை பதிப்பார் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்துள்ள நிலையில், ஜெய்ஸ்வாலுடன் அஸ்வினும் 5 ரன்களுடன் பேட்டிங் செய்து வருகிறார். முதல் டெஸ்டில் செய்த தவறுகளை மீண்டும் ஒரு முறை செய்யாமல், இங்கிலாந்து அணி வீரர்களை சீக்கிரம் அவுட் செய்து இந்த தொடரின் முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர்.

இதனிடையே, இந்த போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அரிதான சம்பவம் நடந்து தற்போது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், இந்திய மண்ணில் ஒரு சிறந்த பார்ட் டைம் பவுலராகவும் உருவெடுத்துள்ளார்.

- Advertisement 2-

இந்திய பிட்ச்சில் இவரது ஸ்லோ பந்துகள் அதிகம் கைகொடுத்து வரும் நிலையில், முதல் டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். இதனால், ரியல் பந்து வீச்சாளர்களை போலவே ஜோ ரூட்டின் பந்தை எதிர்கொள்ள இந்திய அணி தயாராக வேண்டிய நிலையும் இருந்தது.

அப்படி இருந்த சூழலில், இரண்டாவது டெஸ்டில் இதுவரை ஜோ ரூட் வீசிய ஓவர்களில் நேர்த்தியாக ஆடி ரன் சேர்த்து விட்டது இந்திய அணி. அதே போல, எந்த விக்கெட்டுகளையும் அவர் எடுக்கவில்லை. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது ஓவரை ஜோ ரூட் வீசி இருந்தார். அந்த வகையில், டெஸ்ட் கிரிக்கெட்டின் 102 வருட வரலாற்றில் ரெண்டாது தடவையாக ஒரு அரிய நிகழ்வு நடந்துள்ளது.

பொதுவாக டெஸ்ட் போட்டிகளின் ஆரம்ப ஓவர்களை வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் சூழலில், கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணி வீரர் ஜேக் லீச் 2 வது ஓவரை வீசி இருந்தார். அதனைத் தொடர்ந்து, இந்திய அணிக்கு எதிராக தற்போது ஆரம்பமான போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் இரண்டாவது ஓவரை வீசி கிரிக்கெட் அரங்கில் முக்கியமான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.

சற்று முன்