- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித் மாதிரி பண்ணனும்னு நினைக்காதீங்க.. உங்களுக்கு சரிப்பட்டு வரல.. கோலியை எச்சரித்த ஸ்ரீகாந்த்..

ரோஹித் மாதிரி பண்ணனும்னு நினைக்காதீங்க.. உங்களுக்கு சரிப்பட்டு வரல.. கோலியை எச்சரித்த ஸ்ரீகாந்த்..

- Advertisement 1-

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை, அதே ஆண்டில் நடந்த டி20 உலக கோப்பை, கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை என அனைத்து தொடர்களிலும் பேட்டிங்கில் இந்திய அணியின் முதுகெலும்பாக திகழ்ந்தவர் விராட் கோலி. இந்த ஆண்டு டி 20 உலக கோப்பை ஜூன் மாதம் ஆரம்பமாக உள்ள நிலையில், சுமார் 14 மாதங்கள் டி20 போட்டிகளில் ஆடாமல் இருந்த விராட் கோலி, ஆப்கானிஸ்தான அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த டி20 தொடரில் மீண்டும் களமிறங்கி இருந்தார்.

இந்த தொடரில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தாலும் விராட் கோலியின் பேட்டிங் அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தது. முதல் போட்டியில் களமிறங்காத அவர், இரண்டாவது போட்டியில் 29 ரன்களும், மூன்றாவது போட்டியில் கோல்டன் டக் அவுட்டாகியும் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருந்தார். டி 20-ல் அவர் முதல் முறை கோல்டன் டக் அவுட்டாகி இருந்த சூழலில், அவர் பேட்டிங் மீதும் அதிக விமர்சனம் எழுந்திருந்தது.

இதற்கு காரணம் பொதுவாக எப்போதுமே பொறுமையாக தனது பேட்டிங்கைத் தொடங்கிய பின்னர் கடைசியில் அதிரடியாக ஆடும் விராட் கோலி, இந்த இரண்டு போட்டிகளிலும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை கடைபிடித்து இருந்தார். விராட் கோலியின் இந்த பேட்டிங் மாற்றம், திடீரென சில பிரபலங்கள் மத்தியில் பாராட்டுகளையும், அதே வேளையில் சிலர் மத்தியில் விமர்சனத்தையும் சந்தித்து வந்தது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், விராட் கோலி பேட்டிங் பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “பொதுவாக ஒவ்வொரு வீரருக்கும் ஒரு பேட்டிங் திறன் இருக்கிறது. அதைத்தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். அதிரடியாக ஆடும் ஜெய்ஸ்வாலிடம் போய் நீங்கள் மெதுவாக ஆட வேண்டும் என்று கூறினால் அது சிறப்பாக இருக்காது. ரோகித் சர்மாவிடம் அவ்வாறு விளையாடும் திறன் இருக்கிறது.

- Advertisement 2-

அதேபோல ஆட நினைக்காமல் விராட் கோலி எப்போதும் போல பொறுமையாக தனது பேட்டிங்கை தொடங்க வேண்டும். நேரம் எடுத்து விளையாடுவதை கடைபிடிக்கும் அவர், கடைசி கட்டத்தில் அதிரடியாக சிக்சர் விளாசும் ஆட்டமும் உள்ளது. மெல்போர்னில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அப்படி ஆடியதை பார்த்தோம். இதனால் முதல் பந்தில் இருந்து அடித்து ஆடினால் ஒரு சில போட்டிகளில் மட்டும் தான் சாதிக்க முடியும்.

அது மட்டுமில்லாமல் இத்தனை நாட்கள் சர்வதேச போட்டிகளில் அவர் எப்படி ஆடி சாதித்தாரோ அதனையே கோலி பின்பற்ற வேண்டும்” என ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்