- Advertisement 3-
Homeவிளையாட்டுஎது.. இந்த வீரர் அணியில இருக்கணுமா.. விருப்பம் இல்லாட்டி போட்டியை பாக்காத - ரசிகரின் கேள்விக்கு...

எது.. இந்த வீரர் அணியில இருக்கணுமா.. விருப்பம் இல்லாட்டி போட்டியை பாக்காத – ரசிகரின் கேள்விக்கு கோவமாக பதிலளித்த முன்னாள் இந்திய வீரர்

- Advertisement 1-

உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. ஆசியக் கோப்பை 50 ஒவர் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கிறது.

இந்த ஆறு அணிகளும் இரு குரூப்பாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ -இல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபால் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி யில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் குரூப் ஏ வில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான போட்டியை காண உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

ஆசியக் கோப்பையை வெல்ல ஆறு அணிகளும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து அணிகளும் சம பலத்துடன் உள்ளதால் அனைத்து போட்டிகளுக்குமே விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. பாகிஸ்தானிலும் இந்த போட்டி நடைபெறுவதால் அந்த அணிக்கு சற்று கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசியக் கோப்பைக்கான இந்திய அணிக்கான வீரர்களை பிசிசிஐ கடந்த இரு நாட்களுக்கு முன் அறிவித்தது. இந்த அணியில் சுழற் பந்துவீச்சாளர்களான யுஸ்வேந்திர சஹாலும், ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம் பெறவில்லை. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக பார்க்கப்படுகிறது.

- Advertisement 2-

அஸ்வின் அணியில் சேர்க்கப்படாதது குறித்து சமூக வலைதளங்களில் மிகுந்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் முன்னாள் இந்திய அணி கேப்டனான சுனில் கவாஸ்கரிடம் இது குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் காட்டமாக பதிலளித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ளார் அவர், வீரர்கள் தேர்வு என்பது நடந்து முடிந்த விஷயமாகும். தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியானது சிறந்த வீரர்களை கொண்டுள்ள அணியாகும். இந்த அணி ஆசியக் கோப்பையை வெல்லக்கூடிய எல்லா தகுதியையும் கொண்டுள்ள அணியாகும். எனவே இதை பற்றி பேசுவது தேவையற்றது.

மேலும் அவர் கூறுகையில், இப்போது தேர்வு செய்துள்ள இந்திய அணி ஆசிய கோப்பையை மட்டுமல்ல உலகக் கோப்பையையும் வெல்லக்கூடிய அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள அணியாகும். அப்படி, இந்த அணியை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். தேவையற்ற சர்ச்சையை கிளப்புவதை நீங்கள் தவிர்க்க வேண்டும் என ரசிகருக்கு சுனில் கவாஸ்கர் காட்டமாக பதிலளித்துள்ளார்.

சற்று முன்