- Advertisement -
Homeகிரிக்கெட்நான் மட்டும் கேப்டனா இருந்திருந்தா உ.கோ தொடரில் இத செஞ்சிருப்பன்... ரோகித் சர்மா குறித்து...

நான் மட்டும் கேப்டனா இருந்திருந்தா உ.கோ தொடரில் இத செஞ்சிருப்பன்… ரோகித் சர்மா குறித்து சேவாக் பேச்சு

-Advertisement-

2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றும் போது அந்த அணியில் விளையாடும் வாய்ப்பு ரோகித் சர்மாவிற்கு மறுக்கப்பட்டது. விராட் கோலிக்கு முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரோகித் சர்மா 2007-ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற போது அணியில் இருந்த வேளையில் 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பைக்கு இளம்வீரரான விராட் கோலி தேர்வு செய்யப்பட்டு ரோகித் சர்மா நிராகரிக்கப்பட்டார். ஏற்கனவே இதுகுறித்து வருத்தத்தையும் ரோகித் சர்மா பலமுறை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த 12 ஆண்டுகள் கழித்து தற்போது 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் தற்போது ரோகித் சர்மா கேப்டனாக இந்திய அணியை வழி நடத்தி வருகிறார். ரோஹித் சர்மாவின் இந்த நீண்ட பயணத்தில் உலகக்கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்ற குறை மட்டும் இருந்து வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு நடைபெற்று வரும் இந்த நடப்பு உலக கோப்பையை வென்று அந்த குறையை ரோகித் சர்மா போக்கி கொள்வார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே தங்களது துவக்க போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய வேளையில் அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா உலககோப்பை தொடரில் ஏழாவது சதத்தை பதிவு செய்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான வீரேந்திர சேவாக் 2011-ஆம் ஆண்டு ரோஹித் நிராகரிக்கப்பட்டது குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

-Advertisement-

நான் மட்டும் அப்போது கேப்டனாகவோ அல்லது செலெக்டராகவோ இருந்திருந்தால் நிச்சயம் ரோஹித் சர்மாவை அணியில் தேர்வு செய்திருப்பேன். இப்போது உள்ள ரோகித் சர்மா அப்போது கிடையாது. அப்போது ரோஹித் சர்மா மிகவும் இளமையான வீரராகவே இருந்தார். ஒருவேளை அப்போது நான் ஒரு கேப்டனாகவோ, ஒரு செலெக்டராகவோ இருந்திருந்தால் நிச்சயம் ரோஹித் சர்மாவை அணியில் சேர்த்து அவருக்கு ஆதரவு வழங்கி இருப்பேன் என சேவாக் தெரிவித்துள்ளார்.

2011-ஆம் ஆண்டு வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இந்திய உலகக்கோப்பை அணியில் ரோகித் சர்மா இடம் பிடித்திருந்தார். அதோடு 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராகவும் ஒரே தொடரில் 5 சதங்கள் அடித்த வீரராகவும் அவர் சாதனை படைத்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் ஏழாவது சதத்தை விளாசியது மட்டும் இன்றி 556 சிக்ஸர்கள் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்