- Advertisement 3-
Homeவிளையாட்டுபாவம்யா இந்திய பவுலர்கள்.. பூரா பயலும் இப்படி ஆடுனா எப்படி... ரியல் டெஸ்ட் கிரிக்கெட்னா என்னனு...

பாவம்யா இந்திய பவுலர்கள்.. பூரா பயலும் இப்படி ஆடுனா எப்படி… ரியல் டெஸ்ட் கிரிக்கெட்னா என்னனு காட்டும் வெஸ்ட் இண்டீஸ்

- Advertisement 1-

வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரினிடாட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெயிட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் ஒன்றரை நாட்கள் பேட்டிங் ஆடிய இந்திய அணி 438 ரன்கள் குவித்தது. விராட் கோலி 121 ரன்களும், ரோகித் சர்மா 80 ரன்களும் சேர்த்தனர். அதேபோல் ஜடேஜா, அஸ்வின், ஜெய்ஸ்வால் ஆகியோர் அரைசதம் விளாசினர்.

இதையடுத்து இரண்டாம் நாளில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 86 ரன்களை குவித்தது. பின்னர் 3ஆம் நாள் ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெயிட் – மெக்கன்ஸி கூட்டணி தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் இந்திய பவுலர்களை ஒரு வழியாக்கிவிட்டார்.

யார் வீசினாலும் ரன்கள் சேர்க்க மாட்டேன் என்று பிடிவாதத்துடன் ஆடியே அரைசதம் கடந்துவிட்டார். இவரை வீழ்த்தி அஸ்வின் தலைசிறந்த பந்தை வீச வேண்டிய தேவை வந்தது. சுமார் 40 ஓவர்கள் பேட்டிங் செய்த பிராத்வெயிட் 75 ரன்களை மட்டும் எடுத்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுவர் என்று பார்க்கப்பட்ட போது, நட்சத்திர வீரர் பிளாக்வுட் அவருக்கு மேல் மலைபோல் ஆடிக் கொண்டிருந்தார். 92 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் 20 ரன்கள் சேர்த்து ரஹானேவின் அற்புத கேட்ச்சால் ஆட்டமிழந்தார். 3ஆம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 67 ஓவர்களை எதிர்கொண்டு வெறும் 143 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.

- Advertisement 2-

எந்தவொரு வீரருக்கும் ஸ்ட்ரைக் ரேட் 50க்கு மேல் இல்லை. இங்கிலாந்து அணி பேஸ் பால் என்று கம்பு சுற்றி வரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி ரியல் டெஸ்ட் கிரிக்கெட்டை இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. இதனால் 2வது டெஸ்ட் போட்டி டிராவிடுமோ என்ற ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வருகிறார்கள்.

மேலும், அடுத்த 2 நாட்களும் போர்ட் ஆஃப் ஸ்பெயின் ஆடுகளம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்கும் என்று டாஸின் போதே தெரிவிக்கப்பட்டது. இதனால் இன்றைய நாளில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை ஆல் அவுட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிள்றது.

சற்று முன்