- Advertisement -

உலக டெஸ்ட் பைனலில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்? வெற்றி யாருக்கு சாதகமாக அமையும் தெரியுமா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது நாளை ஜூன் 7-ஆம் தேதி துவங்கி 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டிக்கான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தற்போது தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்டுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது..

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நடைபெற்று வந்த இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்த இறுதிப்போட்டியில் மோதவுள்ள வேளையில் ஒருவேளை இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பது குறித்த கேள்வியே அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற 16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டதால் ரிசர்வ் டேவில் மீண்டும் இறுதிப்போட்டி நடைபெற்றது. அப்படி ரிசர்வ் டேவில் போட்டி நடைபெற்ற போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் டக் வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டு இறுதி போட்டியானது நிறைவடைந்தது.

இந்நிலையில் ஒருவேளை இந்த இறுதிப்போட்டியில் மழை குறுக்கிடுமாயின் என்ன நடக்கும் என்பது குறித்து சில தகவல்களை இங்கு காணலாம். அதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால் நிச்சயம் ரிசர்வ் டே உண்டு என்றும் ரிசர்வ் டேவிலும் மழை குறுக்கிட்டால் அம்பயர்களின் முடிவே இறுதி செய்யப்படும்.

- Advertisement -

அதோடு அப்படி ரிசர்வ் டேவில் மழை பெய்து போட்டி அம்பயர்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆகிய இரு அணிகளுமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும். அதோடு இந்த போட்டி டிராவில் முடிவடைந்தாலும் இரு அணிகளுமே சாம்பியன் என்று அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பணத்துக்காகலாம் என்னால ஐபிஎல்-ல விளையாட முடியாது. எனக்குன்னு ஒரு லட்சியம் இருக்கு. ஆஸ்திரேலிய அணிக்காக இத தான் நான் செய்ய விரும்பறன் – மிட்சல் ஸ்டார்க் அதிரடி பேச்சு

ஏற்கனவே வெளியாகியுள்ள வானிலை அறிக்கையின் படி இந்த இறுதிப்போட்டியில் கடைசி இரண்டு நாட்கள் நிச்சயம் மழை பெய்யும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்படி மழை பெய்தால் ரிசர்வ் டே போட்டி உண்டு என்றும் அப்படி ரிசர்வே போட்டியிலும் மழை பெய்தால் போட்டியின் முடிவு அம்பயர்களால் உறுதி செய்யப்பட்டு கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by
Tags: WTC final

Recent Posts