- Advertisement 3-
Homeவிளையாட்டுடி 20 உலக கோப்பை.. இந்த 4 பேரும் கண்டிப்பா ஆடியே தீரணும்.. புது கணக்கு...

டி 20 உலக கோப்பை.. இந்த 4 பேரும் கண்டிப்பா ஆடியே தீரணும்.. புது கணக்கு போட்ட ஜாகீர்கான்..

- Advertisement 1-

கடந்த ஆண்டு நடந்த ஒரு நாள் உலகக் கோப்பையை இறுதி போட்டி வரை முன்னேறி தவறவிட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு ஆயத்தமாகி வருகிறது. மேலும் டி 20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி கடைசியாக மோதி இருந்த டி20 தொடரும் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்து முடிந்தது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடர், பின்னர் டி20 உலக கோப்பை தொடர் ஆரம்பமாகும் என்பதால் ஐபிஎல் தொடரில் ஆடும் இந்திய வீரர்களின் பங்கு மிக முக்கியம் வாய்ந்ததாகவும் பார்க்கப்பட உள்ளது. இன்னொரு பக்கம் டி20 உலக கோப்பை தொடரில் எந்தெந்த வீரர்கள் இந்திய அணியில் ஆட போகிறார்கள் என்பதே மிகப்பெரிய குழப்பமாக உள்ளது.

இதற்கு காரணம் இந்திய அணி சமீபத்தில் ஆடிய தொடர்களில் எக்கச்சக்கமான வீரர்கள் மாறி மாறி ஆடி வந்ததால், இதிலிருந்து எந்த வீரர்களை டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தயார் செய்யும் என்பது தான்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் கே.எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட பல வீரர்கள் இடம்பெறவில்லை. ஆனால் அவர்களுக்கு பதிலாக இந்த தொடரில் ஆடிய ஷிவம் துபே, ரிங்கு சிங் உள்ளிட்ட பல வீரர்கள் சிறப்பாக ஆடியதால் எப்படி இந்திய அணியின் தேர்வு இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- Advertisement 2-

ஆனால் அதே வேளையில் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியில் எந்த வீரர்கள் உலக கோப்பை தொடருக்காக தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றியும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் நிச்சயம் இந்திய அணிக்காக உலககோப்பைத் தொடரில் இடம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

“பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் நிச்சயம் சிறப்பாக பந்துவீசுவார்கள் என எதிர்பார்க்கிறேன். அவர்களுடன் தனது பந்துவீச்சில் சிறிய வேரியேஷன் காட்டும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும் இடம்பெற வேண்டும். அவரது யார்க்கர் பந்துகள் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இதற்கடுத்து முகமது ஷமியும் ஃபிட்டாகி தயாரானால், உலக கோப்பையில் அவரும் கேம் சேஞ்சராக இருப்பார். இதனால் இந்த நான்கு வேகபந்து வீச்சாளர்களும் அணியில் இடம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்” என தனது கருத்தை தெரிவித்துள்ளார் ஜாகீர்கான்.

சற்று முன்