- Advertisement -
Homeசினிமாவெளியானது ஜெயிலர் படத்தின் மினி ட்ரைலர்

வெளியானது ஜெயிலர் படத்தின் மினி ட்ரைலர்

-Advertisement-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் நெகட்டிவ் விமர்சனல்கள் ஒருபுறம் இருந்தாலும், ரஜினி நெல்சனை நம்பி ஜெயிலர் படத்தை அவரிடம் கொடுத்தார். இதனை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவந்தன. (மினி ட்ரைலர் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது).

ஜெயிலர் படத்தை ஒரு பான் இந்தியா படமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பல மொழிகளில் முன்னணி நடிகர்களாக உள்ள பல நடிகர்களை இதில் இடம்பெற செய்துள்ளார் நெல்சன். குறிப்பாக மோகன்லால், சிவராஜ்குமார் போன்றோரை நாம் கூறலாம். லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அது போன்ற வெற்றியை தானும் கொடுக்க வேண்டும் என்று ரஜினி எண்ணி உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று வெளியான இந்த மினி ட்ரைலரை பொறுத்தவரை, மோகன்லால் ரெட்ரோ கெட்டப்பில் நடந்து வருவது போன்ற காட்சி ஒன்று உள்ளது. அதே போல ரஜினி ஒரு காரில் இருந்து கெத்தாக இறங்குவது போன்ற ஒரு காட்சியும் இடம் பெற்றுள்ளது.

இந்த ட்ரைலரில் எந்த விதமான வசனங்களும் இடம்பெற வில்லை. ஆனால் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் படத்தின் ரிலீஸ் தேதியை ட்ரைலரில் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி ஜெயிலர் படம் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாகும் என்பது தற்போது உறுதி ஆகி உள்ளது.

-Advertisement-

சற்று முன்