சூது கவ்வும் – 2 படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியானது.

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதியின் ஆரம்பகால திரை வாழ்க்கையில் அவருக்கு திரைத்துறையில் முக்கிய அந்தஸ்தை பெற்றுத்தந்த படங்களில் ஒன்று சூது கவ்வும் என்றால் அது மிகையாகாது. நலன் குமாரசாமி இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வரும் தீம் மியூசிக் இன்றளவும் ரீல்ஸ்களில் ட்ரெண்டில் தன் உள்ளது. (மோஷன் போஸ்டர் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது)

விஜய் சேதுபதிக்கு மட்டும் அல்லாமல் நடிகர் அசோக் செல்வன், பாபி சிம்ஹா போன்றோருக்கும் இது ஒரு முக்கியமான படம் என்றே கூறலாம். இந்த நிலையில் சூது கவ்வும் பாகம் 2 குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாக துவங்கியது. ஆனால் இந்த பக்கத்தில் விஜய் சேதுபத்தில் இல்லை. அவருடைய இடத்தில மிர்ச்சி சிவா நடிக்க உள்ளார். அதனால் இந்த பாகத்திலும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பதே எதார்த்தமான உண்மை.

- Advertisement -

அதே போல இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கவில்லை. S.J அர்ஜுன் தான் சூது கவ்வும் 2 வை இயக்குகிறார். இவர் இதற்க்கு முன்பு யங் மங் சங் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆனால் அது இன்னும் திரைக்கு வரவில்லை. கருணாகரன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

சூது கவ்வும் படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த மோஷன் போஸ்டரில் “நீ லாடா இருந்தாலும் உனக்கு காடா நாம் இருப்பேன்” என்ற பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் நிச்சயம் இளசுகளுக்கு பிடிக்கும் வகையில் மெட்டமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்