- Advertisement 3-
Homeவிளையாட்டுஅஸ்வின் செய்த இந்த ஒரு சின்ன விஷயம் TNPL-ல உலக அளவுல உற்று நோக்க வச்சிடுச்சி....

அஸ்வின் செய்த இந்த ஒரு சின்ன விஷயம் TNPL-ல உலக அளவுல உற்று நோக்க வச்சிடுச்சி. ஆனா இதெல்லாம் ரூல்ஸ்லயே இல்ல தெரியுமா – ஆகாஷ் சோப்ரா பேச்சு.

- Advertisement 1-

தமிழக வீரர்களின் திறமைகளை உலக அளவில் வெளிச்சம் போட்டுக் காட்டவும், சிறந்த வீரர்கள் இந்திய அணி மற்றும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் வழி செய்யவும் ஒரு சிறப்பான களமாக உள்ளது டிஎன்பிஎல் போட்டிகள். இந்த முறை டிஎன்பிஎல் போட்டியில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று தங்களது அணிக்கான பங்களிப்பை சிறப்பாக வழங்கி வருகின்றனர். இந்த தொடரில் பல நேரங்களில் சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் எடுத்த ஒரு ரிவ்யூ பெரிய அளவில் பேசுபொருளாக அமைந்தது.

இந்த டிஎன்பிஎல் போட்டியை பொறுத்தவரை அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இந்த அணி கடந்த ஆண்டு பிலே-ஆப் சுற்றில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை டிஎன்பிஎல் கோப்பையை வென்றே ஆகவேண்டும் என்று நோக்கத்தோடு இந்த அணி போராடுவதை நாம் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் திருச்சிக்கு எதிரான போட்டியில் 13வது ஓவரின் ஐந்தாவது தந்தை பௌலர் வீச அது கீப்பரிடம் சென்றது. அதே சமயம் பந்து பேட்டில் பட்டது போல சத்தம் வந்ததால் நடுவர் அதற்கு அவுட் கொடுத்தார். ஆனால் உடனே பேட்ஸ்மேன் டிஆர எஸ் ரிவிவ் எடுக்க, பல்வேறு கோணங்களில் அந்த பந்தை பார்த்துவிட்டு, பந்து பேட்டை கடந்து செல்லும் போது பேட் தரையில் பட்டுள்ளது, அதன் சத்தம் தான் கேட்டுள்ளது என்பதை உணர்ந்து அதற்கு நாட் போட்டு கொடுத்தார்.

ஆனால் அம்பயரின் முடிவு அஸ்வினுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்பதால் அவர் மீண்டும் ஒரு ரவி எடுத்தார். அந்த ரவிவிலும் மூன்றாவது நடுவர் முழுமையாக அனைத்து கோணங்களிலும் பார்த்துவிட்டு அது நாட்டோடு தான் என்று தனது முடிவை தீர்க்கமாக கூறியிருந்தார். இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறியது பின்வருமாறு,

- Advertisement 2-

அஸ்வின் அண்ணா செய்த ஒரு சிறிய விடயம் உலகம் முழுக்க டிஎன்பிஎல் போட்டியை உற்று நோக்க வைத்துள்ளது. அஸ்வின் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்துள்ளார் ஆனால் அவர் செய்த ஒரு அப்பில்தான் இதற்கு காரணம். அஸ்வின் உட்பட அவரது அணி வீரர்கள் அனைவரும் சந்தோஷத்தில் மிதக்க, பேட்ஸ்மேன் மூன்றாவது நடுவரிடம் செல்ல, அந்த மூன்றாவது நடுவர் சரியான விதிமுறைகளை பின்பற்றி அனைத்து கோணங்களிலும் அனைத்தையும் உற்று நோக்கி பந்து பேட்டில் படவில்லை என்பதை சரியாக உணர்ந்து சிறப்பான ஒரு முடிவை அந்த தருணத்தில் அவர் வழங்கினார்.

ஆனால் அஸ்வின் அந்த முடிவை எதிர்த்து மேலும் ஒரு டிஆர்எஸ்-ஐ எடுத்தார். இதுதான் எனக்கு புரியவில்லை ஒரு வேலை டிஎன்பிஎல் அதிகாரிகளும் கூட இதை மீண்டும் பார்த்தால் இது போன்ற ஒரு ஆப்சன் போட்டியில் இல்லையே என்பதை உணரக்கூடும். ஏனென்றால் அதற்கு காரணம் உண்டு.

இதையும் படிக்கலாமே: இந்திய வீரர்கள், அவங்களுக்கு சாதகமா தான் முடிவு இருங்கனும்னு அழுத்தம் கொடுப்பாங்க – பொது வெளியில் போட்டுடத்தை பிரபல அம்பயர்

முதலில் டிஆர்எஸ் ரிவ்யூ எடுக்க வேண்டும் என்றால் அது 15 நொடிக்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். நடுவர் தனது முடிவை சரியாக கூறிய பின்பும் நடுவரின் முடிவையே நீங்கள் மறுபரிசீலனை செய்வது போல் அமைந்துள்ளது அஸ்வின் எடுத்த டிஆர்எஸ் என்று அவர் கூறியுள்ளார்.

சற்று முன்