- Advertisement 3-
Homeவிளையாட்டுஎல்லாமே மாறிப்போச்சு, இந்திய அணியில முன்ன நண்பர்களா இருந்தவங்க இப்போ அப்படியே மாறிட்டாங்க. எல்லாரோட எண்ணமும்...

எல்லாமே மாறிப்போச்சு, இந்திய அணியில முன்ன நண்பர்களா இருந்தவங்க இப்போ அப்படியே மாறிட்டாங்க. எல்லாரோட எண்ணமும் வேற மாதிரி இருக்கு – அஸ்வின் பேச்சு

- Advertisement 1-

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி முடிவுற்ற இருந்தாலும் அது குறித்த சர்ச்சைகள் இன்னும் முடிந்தபாடில்லை என்றே கூறலாம். ஒருவேளை இந்திய அணி அதில் வென்றிருந்தால் இவ்வளவு சர்ச்சைக்கு இடம் இருந்திருக்காதோ என்று தோன்றுகிறது. குறிப்பாக உலகத்தரம் வாய்ந்த பவுலரான அஸ்வின் இந்திய அணியின் பிளேயிங் 11-ல் அந்த போட்டியில் இடம் பெறாதது குறித்து சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரும் அதை விமர்சித்துள்ளனர்.

அஸ்வின் அந்த போட்டியில் விளையாடுவதற்கு மிகவும் ஆர்வமாக இருந்த நிலையில் போட்டி ஆரம்பமாவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அவருக்கு, தான் அந்த போட்டியில் விளையாடப் போவதில்லை என்ற தகவல் அறிவிக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். ஆனாலும் அவர் அந்தத் தொடர் முழுக்க தன்னால் முடிந்த அளவு உதவியை தன் அணி வீரர்களுக்கு செய்தார் என்றே கூறலாம். அதேசமயம் போட்டியின் இடைவேளை நேரங்களில் பயிற்சியாளர் ராகுல் டிராவினோடு அவர் பேசிக் கொண்டிருப்பதையும் நாம் அந்த போட்டி நடந்த சமயத்தில் தொலைக்காட்சியில் காண முடிந்தது.

இந்த நிலையில் அந்தத் தொடரின் தோல்விக்கு பிறகு இந்தியா வந்த அஸ்வின் அந்தப் போட்டி குறித்த தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியாக கொடுத்திருந்தார் அதில் அவர் கூறுகையில்,

ஒரு காலத்தில் நாங்கள் கிரிக்கெட் விளையாடிய போது என்னுடைய டீம் மெட்ஸ் அனைவரும் நண்பர்களாக இருந்தனர். ஆனால் இப்பொழுது எல்லாம் சக ஊழியர்களாக மாறிவிட்டனர். இதில் நான் பெரிய வேறுபாடே காண்கிறேன். ஏனென்றால் இப்போது எல்லோரும் தங்களுக்கு அருகில் இருக்கும் வீரர்களை விட தாங்கள் திறமைசாலியாக இருக்க வேண்டும் என்று எண்ணி அதற்காக உழைக்க ஆரம்பித்து விட்டார்கள். அதன் காரணமாக யாருக்கும் அடுத்தவர்களிடம் பேச கூட நேரம் இருப்பதில்லை என்று அஸ்வின் இந்தியன் எக்ஸ்பிரஸ்சுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

- Advertisement 2-

WTC பைனல் முடிந்த கையோடு அவர் தமிழகத்தில் நடக்கும் டிஎன்பிஎல் போட்டியில் பங்கேற்க உடனே கிளம்பி தமிழ்நாடு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக டிஎன்பிஎல்-லில் விளையாடிக் கொண்டிருக்கும் அவர் பல்வேறு விதமான யுக்திகளை கையாண்டு அந்த அணியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல உழைத்து வருகிறார். சமீபத்தில் அவர் எடுத்த ஒரு ரெவியூ கூட பெரும் விவாதமானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: பிக் பாஸ்ஸில் பங்கேற்க போகும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர். அப்போ நிகழ்ச்சியில பல சுவாரசியம் இருக்கும் போலயே.

டிஎன்பிஎல் போட்டிக்கு பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியின் டெஸ்ட் ஸ்குவாட்டில் அஸ்வின் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயமாக மேற்கிந்திய பிச்சானது ஸ்பின்னர்களுக்கு சாதகமான ஒரு பிச்சையாக இருக்கும் என்பதால் அங்கு அஸ்வினின் திறமை சிறப்பாக வெளிப்படும் என்று கூறப்படுகிறது.

சற்று முன்