- Advertisement 3-
Homeவிளையாட்டுDRS-கே DRS எடுத்து அம்பயரையே கன்ப்யூஸ் பண்ண அஸ்வின். இவர் எத ரெவியூ பண்ண சொல்றாருனு...

DRS-கே DRS எடுத்து அம்பயரையே கன்ப்யூஸ் பண்ண அஸ்வின். இவர் எத ரெவியூ பண்ண சொல்றாருனு நேரலையிலேயே கமெண்ட் செய்த வர்ணனையாளர்

- Advertisement 1-

TNPL தொடர் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆறு தமிழ்நாட்டைச் சேர்ந்த அணிகள் மோதுகின்றன. மூன்றாவது நாளான நேற்று திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. திருச்சி அணிக்கு எதிராக சிறப்பாக பவுலிங் வீசிய திண்டுக்கல் அணி பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் இருந்தே விக்கெட்களை வீழ்த்தினர்.

அந்த அணியின் கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜு மட்டும் அதிகப்படியாக 48 ரன்கள் சேர்த்தார். அவருக்கு துணையாக ராஜ்குமார் 39 ரன்கள் சேர்த்தார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 19.1 ஓவர்களில் 120 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

இந்த போட்டியில் திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சில் திருச்சி அணி வீரர் ராஜ்குமார் பேட் செய்யும் போது அவர் அந்த பந்தை அடிக்க முயன்று விக்கெட் கீப்பரிடம் பந்து சென்றது. இதற்கு அஸ்வின் அப்பீல் செய்ய உடனடியாக நடுவர் விக்கெட் என தீர்ப்பளித்தார். ஆனால் இதை ரிவ்யூ செய்தார் ராஜ்குமார்.

ரிவ்யூவில் பந்து, பேட்டை கிராஸ் செய்யும் போது தரையில் அடித்தததால் வந்த சத்தம் என ஸ்னிக்கோ மீட்டரில் காட்டப்பட்டது. நீண்ட நேரம் இதை ஆராய்ந்த மூன்றாம் நடுவர் சந்தேகத்திற்கு இடம் இன்றி அதை நாட் அவுட் என கொடுத்தார். ஆனால் அதில் திருப்தி அடையாத அஸ்வின் மூன்றாம் நடுவரின் முடிவுக்கு ரிவ்யூ கேட்டார். இதனால் மறுபடியும் நடுவர் அந்த விக்கெட்டை ஆராய்ந்தார்.

- Advertisement 2-

ஆனால் பந்து பேட்டுக்கு அருகில் சென்றாலும், பந்து சென்ற பிறகும் பேட் தரையில் மோதிய சத்தம் தெளிவாக அல்ட்ரா எட்ஜ்இல் பதிவாகியது. அதே சமயம் பாலும் பேட்டிற்கும் சற்று இடைவெளியும் இருந்தது. இதை எல்லாம் தீர ஆராய்ந்த நடுவர்கள் மீண்டும் அதை நாட் அவுட் என கொடுத்தனர். இந்த போட்டியில் 121 ரன்களை சேஸ் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 14.5 ஓவர்களில் இலக்கை 4 விக்கெட்கள் மட்டும் இழந்து வெற்றி பெற்றது.

இதையும் படிக்கலாமே: எது, ODIல 396 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியா? U 19 உலக கோப்பை தகுதி சுற்றுல நடந்த சிறப்பான சம்பவம்

திண்டுக்கல் அணியை பொறுத்தவரை ஷிவம் சிங் எஸ் அந்த அணிக்கு அதிகபட்சமாக 30 பந்துகளில் 46 ரன்களை குவித்தார். அதே போல திருச்சி அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் கங்கா ஶ்ரீதர் ராஜு 41 பந்துகளில் 48 ரன்களை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்