- Advertisement -
Homeகிரிக்கெட்சிஎஸ்கே அணி அபார வெற்றிக்கு காரணமாக இருந்த பேட் கம்மின்ஸின் தவறான அந்த ஒரு முடிவு.....

சிஎஸ்கே அணி அபார வெற்றிக்கு காரணமாக இருந்த பேட் கம்மின்ஸின் தவறான அந்த ஒரு முடிவு.. இத கவனிச்சீங்களா..

-Advertisement-

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை அணி ஆரம்பத்தில் சில போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று பலமாக இருந்த அதே வேளையில் லக்னோ அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து சற்று நெருக்கடியை சந்தித்திருந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணி, அடுத்து லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து இருந்தது.

இந்த போட்டியில் அவர்கள் 210 ரன்கள் அடித்திருந்த போதும் லக்னோ அணியின் அதிரடி வீரர் ஸ்டாய்னிஸ் சிறப்பாக ஆடி 124 ரன்கள் அடித்து சென்னை ரசிகர்களின் கனவை அதே மைதானத்தில் சிதைத்திருந்தார். இதனால் எட்டு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திலும் இருந்தது சிஎஸ்கே.

மீதி உள்ள ஆறு போட்டிகளும் மிக முக்கியமானது என்பதால் தொடர்ச்சியாக வெற்றிகளை குவிக்கும் நோக்கத்திலும் சிஎஸ்கே அணி தங்களின் ஒன்பதாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர் கொண்டிருந்தது. ஹைதராபாத்தின் அதிரடி பேட்டிங் பற்றி அனைவருக்குமே தெரியும். இதனால் சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படியே நேர்மாறாக போட்டியை முழுக்க முழுக்க கட்டுப்பாட்டில் வைத்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 212 ரன்கள் எடுத்திருந்தது. ருத்துராஜ் 98 ரன்களும், டேரில் மிட்செல் ஐபிஎல் போட்டியில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்து 52 ரன்களும் எடுத்திருந்தார். ஒரு கட்டத்தில் ஷிவம் துபேவும் வழக்கம் போல அதிரடி காட்டியதால் அந்த அணி நல்ல ஸ்கோரை எட்டி இருந்தது.

-Advertisement-

இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருந்த சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே, அபிஷேக்சர்மா, ஹெட் மற்றும் அன்மோல் பிரீத்சிங் என முதல் மூன்று விக்கெட்டுகளையும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் காலி செய்தார்.

இதன் பின்னர் கிளாஸன், மார்க்ரம் உள்ளிட்டோர் நினைத்தும் போட்டியை ஹைதராபாத் அணியின் பக்கம் மாற்ற முடியவில்லை. 18.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால் பரிதாபமாகவும் 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தனர். இந்த சீசனில் தங்களின் பேட்டிங்கால் எதிரணியினருக்கு அச்சுறுத்தலை கொடுத்த ஹைதராபாத் அணி, பெங்களூர் மற்றும் சென்னை அணிக்கு எதிராக அடுத்தடுத்த போட்டியில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், முதல் பேட்டிங்கில் பட்டையை கிளப்பும் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ், இந்த முறை டாஸ் வென்றும் பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தார். பெங்களூரு அணிக்கு எதிராக, சேசிங்கில் தோற்றும் சிஎஸ்கே அணிக்காக முதலில் பேட்டிங்கை எடுக்காமல், பந்து வீச்சை அவர் தேர்வு செய்தது கூட தோல்விக்கு காரணமாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்