- Advertisement -
Homeகிரிக்கெட்கைகொடுக்காத தோனி கேமியோ.. மேட்ச் தோத்தாலும் சிஎஸ்கேவுக்கு ஆறுதலா அமைஞ்ச ஒரே விஷயம்..

கைகொடுக்காத தோனி கேமியோ.. மேட்ச் தோத்தாலும் சிஎஸ்கேவுக்கு ஆறுதலா அமைஞ்ச ஒரே விஷயம்..

-Advertisement-

ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சொந்த மைதானத்தில் இந்த சீசனில் இதுவரை ஆடியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். அதே வேளையில் எதிரணியினரின் சொந்த மைதானத்தில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஆனால், வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தது சிஎஸ்கே. இதே ஆட்டத்தை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக அவர்களின் சொந்த மைதானத்தில் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட சில ஓவர்களை தவிர, போட்டியை முழுக்க முழுக்க கட்டுப்பாட்டில் வைத்திருந்தது லக்னோ அணி.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டது. அதே போல, ஷிவம் துபேவிற்கு முன்பாக நான்காவது வீரராக ஜடேஜா உள்ளே வந்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த, அதே போன்றொரு முக்கியத்துவம் வாய்ந்த இன்னிங்சையும் அவர் ஆடி இருந்தார். முதலில் 150 ரன்களை சிஎஸ்கே தாண்டுவார்களா என்ற கேள்வியும் எழுந்திருந்தது. ஆனாலும் ஒரு கட்டத்திற்கு பின்னர் மொயீன் அலி மற்றும் தோனி ஆகியோர் கடைசி 5 ஒவர்களில் அதிரடி காட்டியதால் சிஎஸ்கே அணி 176 ரன்கள் குவித்திருந்தது.

கடைசி மூன்று ஓவர்களில் அவர்கள் 53 ரன்கள் சேர்க்க, ஜடேஜா 57 ரன்களையும், ரஹானே 36 ரன்களையும் எடுத்திருந்தனர். இதில், ஆல் ரவுண்டர் ஜடேஜா விக்கெட் எடுக்கவும், ரன் குவிக்கவும் தடுமாறி வந்த நிலையில், சிறந்ததொரு இன்னிங்சையும் தற்போது வெளிப்படுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி, எந்தவித நெருக்கடியும் இன்றி சிறப்பாக ஆடி ரன் சேர்த்தது.

-Advertisement-

அந்த அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் கே எல் ராகுல் மற்றும் டி காக் ஆகிய இருவருமே அரைச்சதத்தை கடந்திருந்த நிலையில், மிக எளிதாகவும் போட்டியை மாற்றி இருந்தனர். 11 வது ஓவரில் நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடக்க, 15 ஓவர்கள் முடிவில் 134 ரன்கள் சேர்த்த போது தான் முதல் விக்கெட் விழுந்தது.

டி காக் 54 ரன்கள் சேர்த்து அவுட்டாக, கடைசி 5 ஓவர்களில் லக்னோ அணியின் வெற்றிக்கு 43 ரன்களே தேவைப்பட்டது. பின்னர் வந்த பூரன் அதிரடியாக ஆடி ரன் சேர்க்க, 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்த கே எல் ராகுல், பதிரானா பந்து வீச்சில் அவுட்டானார். ஆனாலும், லக்னோ அணி 19 வது ஓவரில் இலக்கை எட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 3 வது தோல்வியாக அமைந்தாலும் பேட்டிங்கில் ஜடேஜா ஃபார்முக்கு வந்துள்ளது, சிஎஸ்கே மற்றும் டி 20 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-Advertisement-

சற்று முன்