- Advertisement -
Homeகிரிக்கெட்டாஸும் போச்சு.. மேட்சும் போச்சு.. கைகொடுக்காத சேப்பாக்.. மும்பை, ஆர்சிபி போல் மாறிய சிஎஸ்கே..

டாஸும் போச்சு.. மேட்சும் போச்சு.. கைகொடுக்காத சேப்பாக்.. மும்பை, ஆர்சிபி போல் மாறிய சிஎஸ்கே..

-Advertisement-

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளை போல தற்போது சிஎஸ்கே அணிக்கும் இக்கட்டான சூழல் எட்டியுள்ளது. லக்னோ அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத் அணிக்கு எதிராக அடுத்து மோதி இருந்தது.

சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து, பந்து வீச்சையும் அமர்க்களமாக செய்திருந்த சிஎஸ்கே, 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் தங்களின் வெற்றி பயணத்தை தொடங்கி இருந்தது. அப்படி இருக்கையில் தான் அதே சேப்பாக்கம் மைதானத்தில் சென்னையின் வெற்றி பயணத்திற்கு தொடங்கிய இடத்திலேயே முட்டுக்கட்டை போட்டுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

வழக்கம்போல ருத்துராஜ் டாஸ் தோல்வி அடைய, சென்னை முதலில் பேட்டிங் இறங்கியது. மிக நிதானமாக ஆடிய சிஎஸ்கே, 10 ஓவர்களில் 70 ரன்கள் மட்டும் கடந்து மூன்று விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. அதிலும் குறிப்பாக பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ஹர்ப்ரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் மொத்தமாக எட்டு ஓவர்கள் பந்து வீசி 33 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.

இதன் காரணமாக சிஎஸ்கே அணியால் 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது அதிகபட்சமாக கேப்டன் ருத்துராஜ் வழக்கம்போல அரைச்சதத்தை கடந்து 62 ரன்களில் அவுட்டானார். அது மட்டுமில்லாமல் இந்த சீசனில் 500 ரன்கள் கடந்ததுடன் தற்போது ஆரஞ்சு கேப்பையும் கோலியிடமிருந்து சொந்தம் ஆக்கியுள்ளார்.

-Advertisement-

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி மிக எளிதாக ரன் சேர்க்க, அந்த அணியின் தொடக்க தொடக்க வீரர் பேர்ஸ்டோ 46 ரன்களிலும், பின்னர் வந்த ரிலீ ரவுசவ் 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தும் அவுட்டாகினர். இதனால், அவர்களின் வெற்றியும் எளிதாக இருக்க, சாம் கரண் மற்றும் ஷஷாங்க் சிங்கும் நிதானமாக ரன் சேர்த்தனர்.

இதற்கிடையே, முஸ்தாபிசுர் ரஹ்மான் ஷஷாங்க் சிங்கை வைத்துக் கொண்டு ஒரு ஓவர் மெய்டனாக வீசி இருந்தது அனைவரையும் அசர வைத்திருந்தது. தொடர்ந்து எளிதான இலக்கு என்பதால் நிதானமாக ஆடியும் பஞ்சாப் கிங்ஸ் அணி, 18 வது ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த தோல்வியால் சிஎஸ்கேவுக்கு இன்னும் 4 போட்டிகள் இருக்க, குறைந்தபட்சம் மூன்று போட்டிகளிலாவது அவர்கள் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும் என்ற நெருக்கடியான நிலையும் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்