- Advertisement -
Homeகிரிக்கெட்ஒரே சத்தம்.. தோனி உள்ள வந்ததும் பவுலர்ஸ் பயந்துட்டாங்க.. அதைத் தாண்டி ஜெயிச்ச காரணம்.. -...

ஒரே சத்தம்.. தோனி உள்ள வந்ததும் பவுலர்ஸ் பயந்துட்டாங்க.. அதைத் தாண்டி ஜெயிச்ச காரணம்.. – கே எல் ராகுல்

-Advertisement-

இந்த ஆண்டு டி 20 உலக கோப்பை நடைபெற உள்ளதால், இந்திய அணியின் சீனியர் வீரர் கே எல் ராகுலிற்கு அணியில் இடம் இருக்குமா, இருக்காதா என்பது பெரிய கேள்வியாக இருந்தது. 50 ஓவர் போட்டியில் சிறப்பாக ஆடும் ராகுல், டி 20 போட்டியில் தனது ஸ்ட்ரைக் ரேட்டை மிக மிக குறைவாக வைத்திருந்தார். அப்படி ஒரு சூழ்நிலையில் தான் லக்னோ அணியின் கேப்டனாக இருக்கும் கே எல் ராகுல், ஐபிஎல் தொடரில் அசத்தலான ஒரு ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்துள்ளார்.

சென்னை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்த கே எல் ராகுல், தன் மீதான ஸ்ட்ரைக் ரேட் விமர்சனத்தையும் தவிடு பொடியாக்கி உள்ளார். இனிவரும் போட்டிகளிலும் இந்த அதிரடி ஆட்டத்தை அவர் தொடர்ந்தால் நிச்சயம் டி20 உலக கோப்பை இந்திய அணியிலும் அவர் இருப்பார்.

சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 176 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 6 பந்துகள் மீதம் வைத்து ரன் சேர்க்க, எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியையும் கண்டிருந்தனர். முதல் விக்கெட்டிற்கு டி காக்குடன் இணைந்து நல்லதொரு பார்ட்னர்ஷிப்புடன் அடித்தளம் அமைத்த ராகுல், 82 ரன்கள் எடுத்ததுடன் ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

இதன்பின் போட்டியை வென்றது பற்றி கே எல் ராகுல் பேசுகையில், “போட்டியில் வெற்றி பெறும்போது நாம் எடுத்த முடிவுகள் சிறப்பாக இருந்ததாக உணர்வோம். பிட்ச்சுக்கு ஏற்ற வகையில் நான் எனது பந்து வீச்சாளர்களை மாற்றி இருந்தேன். அவர்களும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி இருந்தனர். சிஎஸ்கேவை 160 முதல் 165 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமென நினைத்தோம். ஆனால் எம் எஸ் தோனி உள்ளே நடந்து வந்ததும் அணியின் இளம் பந்து வீச்சாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகினர்.

-Advertisement-

அதே போல, மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரமும் அதிகமாக இருக்க, தோனியும் பேட்டிங்கால் பந்து வீச்சாளர்களை மிரட்டி இருந்தார். இலக்கை நோக்கி ஆடும் போது நன்றாக பேட்டிங்கை தொடங்கினால் சேஸ் செய்துவிடலாம் என்றும் நம்பினோம். சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை கட்டுப்படுத்துவார்கள் என்பதால் நாங்கள் நல்லதொரு ஆரம்பத்தை கொடுத்திருந்தோம். இதனால் அவர்களையும் எளிதாக கையாண்டு போட்டியும் எங்கள் பக்கம் மாறி இருந்தது.

பார்ட்னர்ஷிப் நன்றாக அமைந்தால் சில வாய்ப்புகளை நாம் தைரியமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அது இந்த போட்டியில் அமைந்திருந்தது. அடுத்த போட்டியில் சென்னை மைதானத்தில் ரசிகர்கள் எங்களுக்காக ஆரவாரம் செய்ய மாட்டார்கள் என்பது தெரியும். அதனால் இந்த போட்டியில் சென்னை அணிக்கான ரசிகர்கள் கூட்டத்தின் நடுவே ஆடி தயாராக வேண்டும் என்றும் அணியினரிடம் கூறியிருந்தேன். மீண்டும் சென்னை அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் ஆட ஆவலாக காத்திருக்கிறேன்” என ராகுல் கூறினார்.

-Advertisement-

சற்று முன்