- Advertisement 3-
Homeவிளையாட்டுரோகித் சர்மாலாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான். அதுக்கு அப்பறம் முழுசா பாண்டியா ராஜ்ஜியம் தான்...

ரோகித் சர்மாலாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான். அதுக்கு அப்பறம் முழுசா பாண்டியா ராஜ்ஜியம் தான் – அடித்து செல்லும் மைக்கேல் வாஹன்

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி விரைவில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியாவில் விளையாடவுள்ளது. அதுவரைதான் ரோஹித் ஷர்மா இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருப்பார் என சொல்லப்படுகிறது. இப்போதே அவர் டி 20 போட்டிகளுக்கான அணியில் இருந்து கிட்டத்தட்ட நீக்கப்பட்டுவிட்டார். அதனால் உலகக்கோப்பைக்கு பிறகு அவரிடம் இருந்து அந்த கேப்டன்சியும் கைப்பற்றப்படலாம்.

அப்படி ரோஹித் ஷர்மா கேப்டன்சி பறிக்கப்பட்டால் அவருக்கு பதில் யார் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவார்? இந்த கேள்வியை கடந்த ஆண்டு கேட்டிருந்தால் கண்டிப்பாக பலரும் கே எல் ராகுலை சொல்லி இருப்பார்கள். ஆனால் இப்போது அந்த கேள்விக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவைதான் பலரும் சொல்வார்கள்.

அந்த அளவுக்கு தனது ஐபிஎல் மற்றும் டி 20 அணி கேப்டன்சியால் அனைவரையும் கவர்ந்துள்ளார் ஹர்திக். ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வழிநடத்தி, அந்த அணி கலந்துகொண்ட முதல் சீசனிலேயே கோப்பையை வெல்ல வைத்தார். இப்போது இரண்டாவது முறையும் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்துள்ளார். அவரின் தலைமையில் அணியின் வெற்றி சதவீதம் 70க்கும் மேல் உள்ளது.

இந்நிலையில் இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் வரும்காலம் ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் அமையும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கிரிக்பஸ் இணையதளத்துக்கு பேசும் போது “ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாகப் போகிறார். ஆனால் அது எப்போது இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

- Advertisement 2-

மேலும் “ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அவர் இந்தியாவின் கேப்டனாக இருப்பார். கேப்டன்சியில் அவரிடம் அமைதி இருக்கிறது. அவருக்கு கிரிக்கெட்டை பற்றிய புரிதல் உள்ளது. அவரது முதுகில் ஏற்பட்ட காயம் குறித்து நான் கவலையடைகிறேன், ஆனால் அவர் இப்போது தன்னை சரியான இடத்தில் வைத்துள்ளார்” என்று கூறினார்.

இதையும் படிக்கலாமே: வீடியோ: அகமதாபாத் மைதானத்தில் போலீஸ் ஆபீசரருக்கு அறை விட்ட பெண். இதெல்லாம் சரி இல்லை என குமுறும் நெட்டிசன்ஸ் – வைரல் வீடியோ

மேலும் அவருடைய உடல் மொழியை நீங்கள் பார்க்கலாம். அவர் களத்தை நிதானமாக கையாளும் விதம் சிறப்பானது. அவர் தனது பந்துவீச்சை மாற்றும் விதமும் அருமை. அதே சமயம் அவருக்கு இரண்டு சிறந்த சுழற்பந்து (ரஷீத் கான் மற்றும் நூர் அகமது) வீச்சாளர்களும், இந்த சீசனின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியும் கிடைத்துள்ளனர். ஒரு கேப்டனுக்கு சிறந்த பந்துவீச்சாளர்கள் தேவை. ஒரு சிறந்த ஒயிட்-பால் கேப்டனாக இருக்க வேண்டிய மிடாஸ் டச் (தொட்டதெல்லாம் தங்கமாகும்) அவருக்கு கிடைத்துள்ளது,” என்று வாஹன் புகழ்ந்துள்ளார்.

சற்று முன்