- Advertisement -
Homeகிரிக்கெட்ரியல் கோட் ரா இவரு.. மிடில் ஆர்டரில் பேட்டிங் செஞ்சும் ஐபிஎல் வரலாற்றில் தோனி படைத்த...

ரியல் கோட் ரா இவரு.. மிடில் ஆர்டரில் பேட்டிங் செஞ்சும் ஐபிஎல் வரலாற்றில் தோனி படைத்த சாதனை..

-Advertisement-

உண்மையை சொல்ல போனால் இந்த சீசனில் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் எம். எஸ். தோனி, கடந்த சில சீசன்களாகவே ஐபிஎல் தொடரில் எந்த ஒரு தாக்கத்தையும் தனது பேட்டிங் மூலம் ஏற்படுத்தவில்லை. சிஎஸ்கே அணியின் கேப்டனாக வலம் அந்த தோனி, அணியை சிறப்பாக வழிநடத்தி கீப்பிங்கிலும் நல்லதொரு பங்களிப்பை அளித்து வந்தாலும் அவரது பேட்டிங் பெரிதாக இல்லாமல் போனது ரசிகர்களுக்கு ஒரு நல்ல திருப்தியாக அமையவில்லை.

ஆனாலும் தோனியை மைதானத்தில் பார்த்தாலே போதும் என முந்தைய சீசன்களில் ரசிகர்கள் கூட்டமும் அனைத்து மைதானத்தில் படையெடுக்கவும் செய்திருந்தனர். இந்த முறையும் அது தொடர்ந்து வரும் நிலையில், பழைய ஃபார்ம் அவுட்டிற்கு எல்லாம் சேர்த்து வைத்து மொத்தமாக விருந்து படைத்து வருகிறார் தோனி.

சிஎஸ்கே அணி ஆடிய 7 போட்டிகளில், ஐந்தில் பேட்டிங் செய்துள்ள தோனி, மொத்தம் 83 ரன்கள் எடுத்துள்ளார். இதில் லக்னோ அணிக்கு எதிராக 101 மீட்டர் சிக்சருடன் எக்கச்சக்க சிக்ஸர்கள் பறந்துள்ள நிலையில், இருபதாவது ஓவரில் மட்டும் தோனி பேட்டிங் செய்த போது 16 பந்துகளில் ஆறு சிக்ஸர்களுடன் 57 ரன்களையும் சேர்த்துள்ளார்.

இப்படி போட்டிக்கு போட்டி எந்த பந்து வீச்சாளராக இருந்தாலும், சாட்டையை சுழற்றுவது போல தோனி அடிக்கும் ஷாட்டுகள் மிகச் சிறப்பான ஒரு வரவேற்பையும் ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. 42 வயதிலும் கேப்டன்சி பதவியை துறந்து விட்டு, ரசிகர்களுக்காக விருந்து படைத்து வரும் தோனி, ஐபிஎல் வரலாற்றில் முக்கியமான ஒரு சாதனையையும் தற்போது படைத்துள்ளார்.

-Advertisement-

அதாவது ஐபிஎல் போட்டிகளில், ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக 5000 ரன்களை தொட்ட முதல் வீரர் என்ற சிறப்பை தான் தற்போது எம். எஸ். தோனி பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகள் ஆடியுள்ள வீரராக வலம் வரும் தோனி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆடி இருந்தாலும், 5000 ரன்களை முதல் விக்கெட் கீப்பராக தொட்டுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக நடந்து முடிந்த போட்டியில், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தாலும், பந்து வீச்சு எடுபடாமல் போனதால் அவர்கள் தோல்வியை தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்