- Advertisement 3-
Homeவிளையாட்டுசாய் சுதர்சன பத்தி 2 வருசத்துக்கு முன்னாடி அஸ்வின் போட்ட அந்த ஒரு ட்வீட் ....

சாய் சுதர்சன பத்தி 2 வருசத்துக்கு முன்னாடி அஸ்வின் போட்ட அந்த ஒரு ட்வீட் . கரெக்ட் டைம்ல இப்போ அதை பகிர்ந்த உத்தப்பா.

- Advertisement 1-

சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2023ல், குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவரது அபாரமான ஆட்டத்திற்காக சாய் சுதர்சன் பெருமளவில் பாராட்டப்பட்டார். இடது கை பேட்ஸ்மேனான சுதர்சன் வெறும் 47 பந்துகளில் 96 ரன்களை குவித்து, குஜராத் அணி 200-க்கும் மேற்பட்ட மொத்த ரன்களை எட்ட உதவினார்.

சுதர்சன் ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலையான ரூபாய் 20 லட்சத்திற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகத்தால் வாங்கப்பட்டார். ஐபிஎல் 2023 இல் எட்டு போட்டிகளில் களமிறங்கிய சுதர்சன், மூன்று அரைசதங்களுடன் 51.71 என்ற சராசரியில் 362 ரன்களைக் குவித்தார்.

இறுதிப் போட்டியில் அவரது ஸ்பெஷலான இன்னிங்ஸில் எட்டு பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் என 204.25 ஸ்டிரைக் ரேட்டில் அதிரடியாக விளையாடினார். இளம் வீரரின் இத்தகைய சிறப்புமிக்க ஆட்டம் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்காமல் போனது வருத்தமான ஒன்றாக அமைந்தது.

2018 இல் ஷேன் வாட்சனின் 117 மற்றும் 2014 இல் விருத்திமான் சாஹாவின் 115 ரன்களுக்குப் பிறகு, ஐபிஎல் இறுதிப் போட்டியில் தனிநபர் ஒருவரின் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோராக 21 வயதான சுதர்சனின் இன்னிங்ஸ் அமைந்தது. இதனால் அடுத்தடுத்த சீசன்களில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகும் என சொல்லலாம்.

- Advertisement 2-

இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா மற்றொரு வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினின் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய சாய் சுதர்சன் பற்றிய ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார், அந்த ட்வீட்டில் அஸ்வின் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்ஷன் 2021 இல் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் அவரது அற்புதமான பேட்டிங் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: பண்ட் இடத்துக்கு இவர் தான் பெர்பெக்ட். இவர டீம்ல சேக்கறத பத்தி மொதல்ல யோசிங்க. WTC பைனல்ஸ்ல இவர் விளையாடுனா சிறப்பா செய்வாரு – மேத்யூ ஹைடன் கருத்து

உத்தப்பா, பகிர்ந்த ஆர் அஸ்வினின் ட்வீட்டில் “இந்த இளைஞன் சுதர்சன் ஸ்பெஷல் ஆனவர். அவர் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார். இப்போது அவர் டி20 கிரிக்கெட்டின் நுணுக்கங்களை அறிந்துள்ளார். அவரை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் கவனிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அதைப் பகிர்ந்துள்ள ராபின் உத்தப்பா சாய் சுதர்சனை மூன்று பார்மட் வீரர் என்று பாராட்டினார்.

சற்று முன்