- Advertisement -
Homeகிரிக்கெட்ஜடேஜா, ஷிவம் துபே பேட்டிங் ஆர்டர்.. பவுலிங்கில் சொதப்பிய இடம்.. உண்மையை சொன்ன ருத்துராஜ்..

ஜடேஜா, ஷிவம் துபே பேட்டிங் ஆர்டர்.. பவுலிங்கில் சொதப்பிய இடம்.. உண்மையை சொன்ன ருத்துராஜ்..

-Advertisement-

லக்னோ அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் தொடர்ந்து சிஎஸ்கே தோல்வி அடைந்திருந்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. லக்னோவின் சொந்த மைதானமான எக்கானாவில் சிஎஸ்கே அணி போட்டியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமல் பரிதாபமாக தோல்வி அடைந்திருந்தது. அந்த போட்டி முழுக்க ஆதிக்கம் செலுத்தி இருந்ததால் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு நிச்சயம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்த போட்டியில் பதிலடி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் சிஎஸ்கே ரசிகர்களும் காத்திருந்து வந்தனர்.

அந்த வகையில் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து முடிந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 210 ரன்கள் எடுத்திருந்தது. சேப்பாக்கம் போன்ற மைதானத்தில் 210 ரன்கள் என்பது சிறந்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோராக பார்க்கப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணியிலும் முதல் மூன்று விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்திருந்தது. இதனால் சிஎஸ்கே வின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த நிலையில் தான் யாரும் எதிர்பாராத வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் அசரவைத்திருந்தார் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்.

மூன்றாவது வீரராக உள்ளே வந்த இவர் கடைசி வரை அவுட் ஆகாமல் நின்றுதுடன் வெற்றி இலக்கையும் எட்ட உதவி இருந்தார். 63 பந்துகளில் 13 ஃபோர்கள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 124 ரன்கள் சேர்த்த ஸ்டாய்னிஸ் ஆட்ட நாயகன் விருதுநையும் வென்றிருந்தார். கடைசி ஐந்து ஓவர்களில் சிஎஸ்கேவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த போதிலும் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என இரண்டிலும் கோட்டை விட்டதால் அவர்கள் தோல்வி அடையவும் நேரிட்டிருந்தது.

இரண்டு தொடர் தோல்விகளுக்கு பின் பேசியிருந்த கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட், “இந்த தோல்வியை ஜீரணிக்க கடினமாக உள்ளது. ஆனால் இதை ஒரு சிறந்த கிரிக்கெட் போட்டியாக பார்க்கிறேன். கடைசி ஓவர்களில் லக்னோ வீரர்கள் சிறப்பாக ஆடி இருந்தனர். 13 முதல் 14 ஓவர்கள் வரை போட்டி எங்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

-Advertisement-

ஆனால் ஸ்டாய்னிஸ் மிகச்சிறந்த இன்னிங்ஸை ஆடி இருந்தார். இரண்டாவது இன்னிங்சில் அதிகமாக பனி இருந்தது. இதன் காரணமாக எங்கள் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்தும் அங்கே எடுபடவில்லை. இல்லையென்றால் நிச்சயம் அவர்கள் மூலம் போட்டியை கட்டுப்படுத்தி வெற்றி பாதையை நோக்கி இருப்போம். ஆனால் இதெல்லாம் போட்டியின் ஒரு பங்கு என்பதால் நம்மால் கட்டுப்படுத்த முடியாது.

ஜடேஜா நான்காவது வீரராக பேட்டிங் செய்ய காரணம் பவர் பிளே ஓவர்களில் நாங்கள் இரண்டாவது விக்கெட்டை இழந்தது தான். பவர் பிளேவிற்கு பின்னர் ஒரு விக்கெட் விழுந்தால் ஷிவம் துபே பேட்டிங்கில் வரவேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்தோம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்த இலக்கு நல்லதொரு இலக்காக நான் அப்போதே பார்க்கவில்லை. பயிற்சியின் போது இரவு நேரங்களில் பணி இருந்ததால் தான். ஆனால் இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க லக்னோ பேட்ஸ்மேன்கள் தான் காரணம்” என தெரிவித்தார்.

-Advertisement-

சற்று முன்