- Advertisement -
Homeகிரிக்கெட்கிரிக்கெட் பேஸ்பால் மாதிரி ஆயிடுச்சு.. அந்த பையன் தான் இந்த சீசனோட ஹீரோ - சாம்...

கிரிக்கெட் பேஸ்பால் மாதிரி ஆயிடுச்சு.. அந்த பையன் தான் இந்த சீசனோட ஹீரோ – சாம் குர்ரான்

-Advertisement-

கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 261 ரன்கள் அடித்தும் இப்படி ஒரு முடிவு வரும் என யாருமே நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இந்த சீசனிலேயே அதிகம் கணிக்க முடியாத அணி என நிச்சயம் பஞ்சாப் கிங்சை சொல்லலாம். முதல் நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, அடுத்து நான்கு போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்துள்ளது.

இதனால் வெற்றியே பெற மாட்டார்கள் என நாம் நினைக்கும் போது திடீரென ஒரு விஸ்வரூபமான ஆட்டத்தை ஆடி அனைவரையும் அசர வைப்பார்கள். அசுதோஷ் சர்மா, சஷாங்க் சிங் என பலரும் தொடர்ந்து அப்படிப்பட்ட ஒரு பேட்டிங்கை தான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக வெளிப்படுத்தியும் வருகின்றனர். ஐபிஎல் வரலாற்றிலேயே மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்றாக தான் தற்போது பஞ்சாப் கிங்ஸ் சேசிங் செய்துள்ள ஒரு போட்டியும் மாறியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 261 ரன்கள் எடுக்க, பின்னர் ஆடிய பஞ்சாப் அணி, 6 ஓவர்களிலேயே 93 ரன்களை எட்டி இருந்தது. இளம் வீரர் பிரப்சிம்ரன் சிங், அதிரடியாக 20 பந்துகளில் 50 ரன்கள் கடந்து அவுட்டாக, பின்னர் இணைந்த பேர்ஸ்டோ மற்றும் ஷஷாங்க் சிங் என இருவரும் கொல்கத்தா அணியின் கனவை தகர்த்து கம்பீர நடை போட்டனர்.

இதனால் ஏதோ 150 ரன்களை எட்டிப் பிடிப்பது போன்றும் அவர்கள் ஆட, 19 வது ஓவரிலேயே மிக எளிதாக இலக்கைத் தொட்டு வெற்றி கண்டிருந்தது. ஐபிஎல் வரலாற்றில் இந்த சேசிங் மூலம் பல்வேறு சாதனைகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், கடைசி இடத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியும் தற்போது கொடூர ஃபார்மில் இருப்பது நிச்சயம் மற்ற அணிகளுக்கும் சிக்கலை கொடுக்கும் என்றே தெரிகிறது.

-Advertisement-

இந்த நிலையில், தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் குர்ரான் பேசுகையில், “இந்த வெற்றி மிக முக்கியமானது. இப்போது எல்லாம் கிரிக்கெட் போட்டி பேஸ் பால் ஆட்டம் போல மாறி வருகிறது. கடந்த சில வாரங்கள் எங்களுக்கு மிகவும் கடினமான ஒரு சூழலாக இருந்தது. ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக பயிற்சி செய்து தயாராகி இருந்தனர்.

மேலும் அணியின் பயிற்சியாளர்களும் அதிக தன்னம்பிக்கையை கொடுத்திருந்தனர். இப்படிப்பட்ட பல்வேறு விதமான முயற்சிகளைக் கொண்டு தான் பந்துகளை மீதி வைத்து நாங்கள் இலக்கினை எட்டி இருந்தோம். பேர்ஸ்டோவின் ஆட்டம் அபாரமாக இருந்தது. நீண்ட நாட்களாக காத்திருந்து சிறந்த இன்னிங்சை தற்போது ஆடியுள்ளார்.

சஷாங்க் சிங், இந்த தொடரின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பான வீரர் என நான் சொல்வேன். அப்படிப்பட்ட வீரர்களில் ஒருவர் தான் அசுதோஷ் ஷர்மாவும். இவர்கள் அனைவரையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என நெகிழ்ந்து போய் சாம் குர்ரான் கூறினார்.

-Advertisement-

சற்று முன்