- Advertisement -
Homeகிரிக்கெட்நரைன் ஓவர்ல போட்ட பிளான்.. பேட்டிங் வர்றதுக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டேன்.. ரகசியம் உடைத்த ஷஷாங்க்...

நரைன் ஓவர்ல போட்ட பிளான்.. பேட்டிங் வர்றதுக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டேன்.. ரகசியம் உடைத்த ஷஷாங்க் சிங்..

-Advertisement-

இந்த சீசனுக்காக நடந்த மினி ஏலத்தின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி, தவறான சஷாங்க் சிங் என்ற வீரரை எடுத்து விட்டதாக பல செய்திகள் பரவி அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இரண்டு பேர் சஷாங்க் சிங் என்ற பெயரில் இடம்பெற்று இருந்ததாகவும் அதில் எடுக்க வேண்டிய வீரருக்கு பதிலாக மற்றொரு வீரரை மாற்றி பஞ்சாப் அணி எடுத்து விட்டது என்றும் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் இது முற்றிலும் பொய் என்றும் அந்த சமயத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி விளக்கம் அளித்திருந்தது.

ஆனால் அவர்கள் நிஜத்தில் அப்படி ஒரு வீரரை தவறாக எடுத்திருந்தாலும் கூட இந்த சீசனின் மிகப்பெரிய சொத்தாகவும் அந்த அணிக்காக அவர் மாறி உள்ளது தான் தற்போது அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இளம் வீரர் ஷஷாங்க் சிங் தற்போது பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறார். போட்டி தோல்வியடைந்தாலும் கூட சஷாங்க் சிங்கின் ஆட்டம் மிகச் சிறப்பாக அமைந்து வருகிறது. ஒரு சில போட்டிகளில் அசுதோஷ் சர்மாவுடன் இணைந்து அவர் ஆடி இருந்த ஆட்டம் பஞ்சாப் அணிக்கு அதிகமாக கை கொடுத்திருந்தது.

அந்த வகையில் ஐபிஎல் தொடரிலேயே மிக முக்கியமான ஒரு போட்டியில் தான் சஷாங்க் சிங்கின் அடி தற்போது அனைவரையும் அசர வைத்துள்ளது. இன்னும் பல ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் அவரது இந்த இன்னிங்ஸ் என்றைக்குமே நிலைத்து நிற்கும் வகையில் அமைந்துள்ளது. 262 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய போது பேர்ஸ்டோ 108 ரன்களும், சஷாங்க் சிங் 68 ரன்களும் எடுத்து மிக எளிதாக இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தனர்.

எட்டு சிக்ஸர்களுடன் சஷாங்க் சிங் அடித்த இந்த அடி பேர்ஸ்டோவின் சதத்திற்கு இணையாகவும் இருந்தது. ஐபிஎல் தொடரில் இந்த சரித்திர நிகழ்விற்கு பின் பேசியிருந்த சஷாங்க் சிங், “நான் பேட்டிங் வருவதற்கு முன்பாக பிட்ச் எந்த மாதிரி உள்ளது என்பதை கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது நல்ல பவுன்சில் பந்துகள் நன்றாக வருவதையும் நான் உணர்ந்தேன். நரைன் ஓவரில் சிங்கிள் மற்றும் இரண்டு ரன்களை ஓடி விட்டு மற்ற ஓவரில் அடிக்க வேண்டும் என்பதை நினைத்து அதனை சரியாகவும் நாங்கள் செய்துள்ளோம்.

-Advertisement-

அணியின் பயிற்சியாளர் எனக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்துள்ளார். நான் எப்படி ஆட வேண்டுமோ அப்படியே ஆடவும் என்ன அறிவுறுத்தினார். பேட்டிங்கில் என்னுடன் பேர்ஸ்டோ கொடுத்து ஆதரவு மிகப் பெரிய பாசிட்டிவ்வாக அமைந்தது. 100 டெஸ்ட் மேட்ச் ஆடியுள்ள ஒருவர் உங்களுக்காக கைதட்டும் போது அது மிக மகிழ்ச்சியாக உள்ளது.

இன்னும் ஐந்து போட்டிகள் உள்ளன. நாங்கள் அனைத்திலுமே வெற்றி பெற்று நிச்சயம் இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்