- Advertisement -
Homeகிரிக்கெட்அந்த முன்னாள் வீரர்கிட்ட பேசுனது தான் காரணம்.. அவர் சொன்ன வார்த்தை தான்.. அதிரடியின் ரகசியம்...

அந்த முன்னாள் வீரர்கிட்ட பேசுனது தான் காரணம்.. அவர் சொன்ன வார்த்தை தான்.. அதிரடியின் ரகசியம் உடைத்த அபிஷேக் ஷர்மா..

-Advertisement-

ஐபிஎல் தொடர் என வந்து விட்டாலே எப்போதும் இளம் வீரர்கள் நிறைய பேர் சிறப்பான ஆட்டத்தை தங்கள் அணிகளுக்காக வெளிப்படுத்தி சர்வதேச அணியில் இடம் பிடிக்கவும் முயற்சி செய்வார்கள். அது மட்டுமில்லாமல் சமீப காலமாகவே இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களை தீர்மானிக்கும் ஒரு தொடராகவும் ஐபிஎல் இருந்து வருவதால் பல வீரர்களும் மிக கடினமாக உழைத்து இந்த தொடரில் தங்கள் திறனை வெளி காட்டவும் முயற்சி செய்வார்கள்.

அந்த வகையில் இந்த சீசனிலும் ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த அனுஜ் ராவத், சென்னை அணியில் இடம் பெற்றுள்ள ரச்சின் ரவீந்திரா என பலரும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை மிக கச்சிதமாக பயன்படுத்தி கிரிக்கெட் அரங்கில் கவனம் ஈர்த்து வருகின்றனர். அப்படி ஒரு சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் பல சாதனைகள் படைத்த போட்டியான மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் கூட இளம் வீரர் அபிஷேக் சர்மா தான் தனது அதிரடி ஆட்டத்திற்கு ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 277 ரன்கள் அடித்திருந்த நிலையில் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியும் கொஞ்சம் கூட துவண்டு போகாமல் 246 ரன்கள் வரை எடுத்திருந்தது. இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்த்து அடித்த அதிகபட்ச ஸ்கோர் உள்ளிட்ட பல சாதனைகளையும் ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் படைத்துள்ள நிலையில் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த இளம் வீரரான அபிஷேக் ஷர்மா, 16 பந்துகளில் அரைச்சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.

அது மட்டுமில்லாமல் 23 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் மூன்று ஃபோர்களுடன் 63 ரன்கள் எடுத்த அவர் ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருந்தார். இதற்கு பின் தனது பேட்டிங் பற்றி அவர் பேசுகையில், “நான் முந்தைய பேட்டியில் சொன்னது போலத்தான் முதல் தர போட்டிகளில் ஆடியது எனக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுத்தது. மேலும் எங்கள் அணியில் பேட்ஸ்மேன்களிடம் நீங்கள் போய் உங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று தான் அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள்.

-Advertisement-

அதனால் அடித்து ஆட வேண்டும் என்று நான் முடிவு செய்திருந்தேன். ஹெட்டுடன் இணைந்து பேட்டிங் செய்ததும் அருமையாக இருந்தது. அவர் என்னுடைய ஃபேவரைட் பேட்ஸ்மேன்களில் ஒருவர். மேலும் பேட்டிங் செய்த சமயத்தில் உன்னுடைய பந்தாக இருந்தால் தைரியமாக ஆடு என்று என்னிடம் கூறியிருந்தார். எந்த இடத்தில் இறங்கி ஆட வேண்டும் என்பதைவிட எனக்கு வாய்ப்பு கிடைப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன். முந்தைய நாள் இரவு பிரைன் லாராவுடன் பேசியது எனது பேட்டிங்கிற்கும் அதிகமாக உதவியிருந்தது.

நான் பயிற்சியின் போது பேட்டிங் செய்ததை விட பந்துவீச்சிலும் அதிக கவனம் செலுத்துகிறேன். அதனால் பந்து வீச்சிலும் என்னால் முடிந்ததை முயற்சி செய்ய வேண்டும் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்