- Advertisement -
Homeவிளையாட்டுஐபிஎல் தொடரின் பாதியில்.. பிரேக் எடுக்கும் தோனி.. அதுக்கப்புறமா நடக்க போறது.. ரசிகர்களை ஏங்க வைத்த...

ஐபிஎல் தொடரின் பாதியில்.. பிரேக் எடுக்கும் தோனி.. அதுக்கப்புறமா நடக்க போறது.. ரசிகர்களை ஏங்க வைத்த தகவல்..

- Advertisement-

ஐபில் தொடர் திருவிழாவிற்கு சிஎஸ்கே ரசிகர்கள் எந்த அளவுக்கு எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்களோ அதே வேளையில் அதற்கு நேர்மாறான ஒரு சம்பவமும் அரங்கேறி இருந்தது. ஐபிஎல் என வந்து விட்டாலே சிஎஸ்கே ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பது கேப்டன் தோனியுடைய பேச்சைக் கேட்பதற்கும் அவருடைய ஃபீல்டிங் செட்டிங் மற்றும் கீப்பிங் திறனை பார்ப்பதற்கு மட்டும் தான். அதுமட்டுமில்லாமல் இரண்டு பந்துகள் அவர் பேட்டிங் செய்தாலும் ஒரு சிக்ஸராவது தோனி அடிப்பாரா என்று தான் ரசிகர்களும் ஏக்கத்துடன் அவர் பேட்டிங்கை பார்ப்பார்கள்.

இப்படி முழுக்க முழுக்க ஒரு மாஸ் என்டர்டெயினராக ஐபிஎல் கிரிக்கெட்டில் இருக்கும் தோனி திடீரென தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்பாக தனது கேப்டன்சி பதவியில் இருந்து விலகிக் கொண்டார். இளம் வீரர் ருத்துராஜை புதிய கேப்டனாக அவர்கள் நியமித்தது ரசிகர்கள் மத்தியில் சற்று விமர்சனத்தை சந்தித்திருந்தாலும் பெங்களூர் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின்னர் அவரது கேப்டன்சியை பலரும் பாராட்டி இருந்தனர்.

அது மட்டுமில்லாமல் போட்டிக்கு முன்பும் பின்பும் ருத்துராஜ் பேசிய போது மிக நிதானமாக பதட்டம் இல்லாமல் பேசிய விஷயங்களும் நிச்சயம் தோனியை போல சிஎஸ்கே அணியின் மிக முக்கியமான கேப்டனாக இருப்பார் என்ற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

மேலும் தோனியின் வழியில் அவரது ஆலோசனையுடன் சிஎஸ்கே அணியை தொடர்ந்து சிறப்பாக வழி நடத்தி சென்னை அணி கோப்பையை கைப்பற்றி தோனிக்கு ஒரு பிரியாவிடை கொடுக்கவும் திட்டம் போடுவார் என்றே தெரிகிறது. ஆனால் அதே வேளையில் திடீரென தோனி கேப்டன்சியிலிருந்து விலகி உள்ளதால் இந்த சீசனுடன் அவர் ஓய்வினை அறிவிப்பாரா அல்லது பாதியிலேயே ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவாரா என ஏராளமான கேள்விகள் ரசிகர்களை பின்னி பெடல் எடுத்து வருகிறது.

- Advertisement-

ஐபிஎல் தொடரின் பாஸ் என வர்ணிக்கப்படும் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் தோனி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “தோனி இந்த தொடரில் அனைத்து போட்டிகளில் ஆடுவாரா என தெரியவில்லை. நடுவே சில போட்டிகள் அவர் ஆடாமல் பிரேக் எடுத்துக் கொள்ளலாம் என்றும் நினைக்கிறேன்.

அதற்காகத்தான் அவர் கேப்டன்சி பதவியில் இருந்து விலகினார் என்றும் நான் நினைக்கிறேன். ஆனால் தோனி மிகச் சிறப்பாக தான் பேட்டிங் செய்வார். அதைப் பற்றி நீங்கள் எதுவும் கவலைப்பட வேண்டாம்” என கெயில் கூறி உள்ளார்.

சற்று முன்