- Advertisement -
Homeகிரிக்கெட்சத்தியமா ஹைதராபாத் இப்படி பண்ணுவாங்கனு அப்போ தெரியல.. சிரிச்சுக்கிட்டே கூலாக பேசிய ஹர்திக்..

சத்தியமா ஹைதராபாத் இப்படி பண்ணுவாங்கனு அப்போ தெரியல.. சிரிச்சுக்கிட்டே கூலாக பேசிய ஹர்திக்..

-Advertisement-

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி, மிக விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மைதானத்தில் கூடி இருந்த 35,000 ரசிகர்களுக்கு இந்த போட்டி ஒரு ஃபுல் மீல்ஸ் என்றே தைரியமாக சொல்லலாம். அப்படி ஒரு ஆட்டத்தை தான் இரு அணிகளும் இந்த போட்டி முழுக்க வெளிப்படுத்தி மாறி மாறி நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் காட்டி இருந்தனர்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மா, ஹெட், கிளாஸன், மார்க்ரம் என்ன பலரின் உதவியுடன் 277 ரன்கள் அடித்ததுடன் மட்டும் இல்லாமல் ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் அடித்தும் சாதனை புரிந்திருந்தனர்.

தொடர்ந்து மும்பை அணி ஆடிய ஆட்டத்தை பார்த்தபோது நிச்சயமாக வெற்றி பெற்று விடுவார்கள் என்று தான் அனைவருக்கும் தோன்றி இருக்கும். அவர்களின் ஆட்டத்தால் ஹைதராபாத் ரசிகர்கள் கூட ஒரு நிமிடம் பதறிப்போன நிலையில் தான் பத்தாவது ஓவருக்கு பின்னர் போட்டி அவர்களின் கட்டுப்பாட்டில் வரவும் ஆரம்பித்தது.

திலக் வர்மா விக்கெட் வீழ்ந்த பின்னர் ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் நிதானம் காட்ட கடைசி கட்டத்தில் பவுண்டரிகள் விளாசவும் பார்த்தார்கள். ஆனால் அது கைகூடாமல் போக மும்பை அணியால் 246 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று அமர்க்களப்படுத்தினர்.

-Advertisement-

அது மட்டுமில்லாமல் இந்த போட்டியில் பல்வேறு சாதனைகளும் அரங்கேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் குஜராத்துக்கு எதிராக தோல்வி அடைந்த மும்பை, தற்போது இரண்டாவது தோல்வியை அடைந்துள்ளது. இது பற்றி பேசிய மும்பையின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “277 ரன்களை ஹைதராபாத் அணி எடுக்கும் என நிச்சயம் நினைக்கவில்லை. நீங்கள் நன்றாகவோ அல்லது மோசமாகவோ பந்து வீசினாலும், 277 என்ற ரன்களை அவர்கள் எடுத்தால் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் என்று தான் அர்த்தம்.

நாங்கள் சில இடங்களில் மட்டும் நன்றாக ஆடி இருந்தோம். இளம் பந்து வீச்சாளர்கள் அணியில் இருப்பதால், நாங்கள் இன்னும் நிறைய கற்று கொள்வோம். அனைத்து பேட்ஸ்மேன்களுமே சிறப்பாக ஆடினார்கள். ஆனால் எங்கள் பக்கம் சாதகமாக இது அமையவில்லை. க்வெனா மபகா நன்றாக தான் இந்த போட்டியில் செயல்பட்டார். அவர் இன்னும் சிறப்பாக செயல்பட நேரம் எடுத்துக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்