- Advertisement -
Homeகிரிக்கெட்ரோஹித்கிட்ட இப்படியா நடந்துக்குறது.. ஹர்திக் காட்டிய சைகை.. உச்சகட்ட கடுப்பில் ரசிகர்கள்..

ரோஹித்கிட்ட இப்படியா நடந்துக்குறது.. ஹர்திக் காட்டிய சைகை.. உச்சகட்ட கடுப்பில் ரசிகர்கள்..

-Advertisement-

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா எப்போது அறிவிக்கப்பட்டாரோ அந்த நிமிடம் முதல், அவர்கள் 17 வது ஐபிஎல் சீசனில் முதல் போட்டி ஆடி முடித்தது வரை பல்வேறு விஷயங்கள் பரபரப்பான ஒரு சூழலில் தான் இருந்து வந்தது. ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான ஒரு கேப்டன் என பெயர் எடுத்தவர் தான் ரோஹித் ஷர்மா.

10 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தியதுடன் ஃபைனல்சுக்கு அவர்கள் வந்தாலே கோப்பை தான் என ஒரு பயங்கரமான அணியாக பெயர் எடுத்த மும்பைக்காக ஐந்து முறை கோப்பையை வெல்லவும் ரோஹித் உதவி இருந்தார். அப்படி இருந்தும் மும்பை அணிக்காக ஆடி, பின்னர் குஜராத் அணியில் இணைந்து இரண்டு சீசன்கள் ஆடி, மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆட வேண்டுமென விருப்பம் தெரிவித்து குஜராத் நிர்வாகத்தினர் சம்மதத்துடன் இணைந்தார் ஹர்திக் பாண்டியா.

கேப்டனாகவும் அவர் அறிவிக்கப்பட்டதால் ரோகித் இடத்தை எப்படி ஹர்திக்கால் நிரப்ப முடியும் என ரோகித் சர்மாவின் ரசிகர்களும் இன்னொரு பக்கம் குஜராத் அணிக்காக இரண்டு சீசன்களாக சிறப்பாக செயல்பட்ட போதிலும் அதிலிருந்து அவர் விலகியது குஜராத் ரசிகர்களையும் கடுப்பில் ஆழ்த்தி இருந்தது. இப்படி இரண்டு மாதங்களாகவே மும்பை நிர்வாகம் எடுத்த முடிவு பெரிய அளவில் சர்ச்சையாகவே இருந்து வந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் நடத்த முதல் போட்டியிலும் அது பிரதிபலித்தது.

மைதானத்திலிருந்த ரசிகர்கள் ரோகித், ரோகித் என தொடர்ந்து ஆரவாரம் செய்து கொண்டே இருந்ததால் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிரான குரலாகவும் அது இருந்தது. இதற்கிடையே ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை அணி முதல் போட்டியில் தோல்வியடைந்த சூழலில் இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா எடுத்த சில முடிவுகளும் கூட ரசிகர்களை சோதிக்க வைத்தது.

-Advertisement-

பும்ரா, கோட்ஸி உள்ளிட்ட பல பந்து வீச்சாளர்கள் இருந்தும் முதல் ஓவரை ஹர்திக் பாண்டியா வீசி இருந்தார். அதே போல ஏழு முதல் எட்டு பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி முக்கியமான பந்துவீச்சாளர்களுக்கு அதிகமான ஓவரையும் ஹர்திக் கொடுக்காமல் போனது கடும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. மிகச் சிறப்பாக இந்த போட்டியில் பந்துவீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகள் எடுத்த பும்ரா முதல் 11 ஓவர்களில் ஒரு ஓவர் மட்டுமே வீசியிருந்தார்.

ஒருவேளை அவர் ஆரம்பத்திலேயே வீசியிருந்தால் குஜராத் அணியை இன்னும் குறைவான ரன்களில் கட்டுப்படுத்தி வெற்றி பெறவும் மும்பை அணிக்கு வாய்ப்பு உருவாகி இருக்கும் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. ஏற்கனவே ரோஹித் மற்றும் ஹர்திக் பாண்டியா விஷயத்தில் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்த நிலையில் தான் இந்த போட்டியில் ரோஹித்தை பார்த்து ஹர்திக் செய்த விஷயமும் ரசிகர்களை இன்னும் கொந்தளிக்க வைத்துள்ளது.

பொதுவாக கேப்டனாக இருக்கும் போது ரோஹித் பவுலர் அருகே தான் ஃபீல்டிங் நிற்பார். ஆனால் நேற்றைய போட்டியில், அவர் பெரும்பாலும் பவுண்டரி லைன் அருகே தான் நின்றார். அப்படி ஒரு முறை, ரோஹித்தை பின்னால் செல்லும்படி ஹர்திக் சைகை காட்ட, நானா என்பது போல சைகை காட்டி கேட்டார் ரோஹித்.

அதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் ஆமா என ஹர்திக் சொல்லிவிட்டு வேறொரு ஃபீல்டரை ரோஹித் இடத்தில் நிற்க செய்த விஷயம் தான் இப்போது ஹாட் டாபிக்காக உள்ளது.

-Advertisement-

சற்று முன்