- Advertisement -
Homeகிரிக்கெட்உண்மையான வீரனுக்கு அழகு என்ன தெரியுமா? இந்திய அணி குறித்து கபில் தேவ் பேச்சு

உண்மையான வீரனுக்கு அழகு என்ன தெரியுமா? இந்திய அணி குறித்து கபில் தேவ் பேச்சு

-Advertisement-

இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த ஐசிசி-யின் 13-வது ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இந்த தொடர் முழுவதுமே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி எந்த ஒரு போட்டியிலும் தோற்காமல் இறுதிப்போட்டிக்கு சென்றது.

ஆனால் பலம் வாய்ந்த அணியாக இறுதிப்போட்டிக்கு சென்று தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில் இந்திய அணி வீரர்களுக்கும் இந்த உலகக் கோப்பை தோல்வி ஒரு மறக்க முடியாத தருணமாக மாறியுள்ளது. குறிப்பாக போட்டி முடிந்த பின்னரும் மைதானத்தில் இருந்த இந்திய வீரர்கள் கண்கள் கலங்கி இருந்ததை நாம் பார்க்க முடிந்தது.

இந்த உலகக் கோப்பையை இந்திய அணி எப்படியாவது கைப்பற்றி விடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கும், நிச்சயம் இம்முறை கோப்பையை வென்று சாதனை படைப்போம் என்ற கனவுடன் காத்திருந்த வீரர்களுக்கும் இந்த தோல்வி ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிகழ்வாக மாறியது.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த பிறகு பலரும் இந்திய அணியின் வீரர்களுக்கு ஆறுதல் கூறிவரும் வேளையில் தற்போது முன்னாள் கேப்டனான கபில் தேவ் சில கருத்துக்களை பகிர்ந்து வீரர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளார்.

-Advertisement-

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது : விளையாட்டில் இவற்றையெல்லாம் கடந்து சென்றாகத்தான் வேண்டும். இந்த வலியை வாழ்க்கை முழுவதும் சுமக்க முடியாது. விளையாட்டை பொறுத்தவரை அடுத்தடுத்த நாளுக்கான திட்டத்தை வகுக்க வேண்டும். நடந்து முடிந்ததை யாராலும் மாற்ற முடியாது. தொடர்ந்து கடினமாக முயற்சி செய்வதே விளையாட்டு வீரர்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.

இந்த தொடர் முழுவதும் நீங்கள் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினீர்கள். ஆனால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. “தோல்வியில் இருந்து பாடம் கற்பது தான் உண்மையான விளையாட்டு வீரனுக்கு அழகு” என்று இந்திய வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சில கருத்துக்களை கபில் தேவ் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்