- Advertisement -
Homeகிரிக்கெட்ஹர்திக் பாணியில் ரோஹித்தை புறக்கணித்த அறிமுக வீரர்?.. மும்பைக்கு எதிராக கிளம்பிய ரசிகர்கள் குரல்..

ஹர்திக் பாணியில் ரோஹித்தை புறக்கணித்த அறிமுக வீரர்?.. மும்பைக்கு எதிராக கிளம்பிய ரசிகர்கள் குரல்..

-Advertisement-

நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் மோதியதில் இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் முதல் போட்டியே வெற்றிகரமாக தொடங்கி உள்ளது குஜராத் அணி. ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆன நாள் முதல் அவர் மீதான நெருக்கடியும், விமர்சனங்களும் அதிகமாக இருந்து வரும் நிலையில் ஒரு போட்டியில் மும்பை அணி தோற்றால் கூட அது கடினமான விமர்சனத்துக்குள்ளாகும் என்ற சூழல் தான் இருந்தது.

அப்படி ஒரு நிலையில் தான் தான் இரண்டு சீசன்களாக ஆடி வந்த குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 17 வது சீசனை தொடங்கி இருந்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 168 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி சிறப்பாக ஆடி இருந்த போதிலும் கடைசி ஐந்து ஓவர்களில் 42 ரன்களைக் கூட அடிக்க முடியாமல் கைவசம் விக்கெட்டுகள் இருந்தும் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவ நேரிட்டது.

இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை பொருத்தவரையில் முதலில் பந்து வீச்சாளர்களை ரொட்டேட் செய்த விதமே கடுமையான குழப்பத்திற்கு தான் ரசிகர்களை ஆழ்த்தியது. பும்ரா, கோட்ஸி உள்ளிட்ட வீரர்கள் இருந்தும் முதல் பத்து ஓவர்களில் இருவரும் தலா ஒரு ஓவர்கள் மட்டும் தான் வீசியிருந்தனர். இதேபோல ஹர்திக் பாண்டியா கேப்டன் என்ற தொனியில் முதல் ஓவரையே அவர் வீசி ரன்கள் கொடுத்திருந்ததும் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்திருந்தது.

ஹர்திக் பாண்டியாவின் பல முடிவுகள் அவருக்கு எதிராகவே திரும்பிய நிலையில் தான் அவர்கள் தோற்றுது மும்பை ரசிகர்களை இன்னும் கொந்தளிக்க வைத்திருந்தது. இதற்கிடையில் ரோகித் சர்மாவை அவர் ஒருமுறை ஃபீல்டிங் நிற்க சொல்லி ஹர்திக் பாண்டியா அறிவுறுத்திய வீடியோவும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கடுப்பாக்கியிருந்தது.

-Advertisement-

இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடரில் முதன் முறையாக களமிறங்கிய மும்பை அணியில் வேகப்பந்து வீச்சாளர் லுக் வுட் செய்த காரியமும் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது. தனது முதல் ஓவரை லுக் வுட் வீசிக் கொண்டிருந்த சமயத்தில், அவர் அருகே வந்த ரோஹித் சர்மா, பந்து வீச்சாளரை தேற்றி இருந்தார்.

ஆனால் இதை பொருட்படுத்தாத லுக் வுட், பந்தை எடுத்துக் கொண்டு நடந்து செல்ல ரோஹித்தை அவர் புறக்கணித்தார் என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தலங்களில் குறிப்பிட்டனர். ஆனால் பந்து வீச்சளர்கள் பந்து வீசி கொண்டிருக்கும் போது தங்களை தேற்றும் ஃபீல்டர்களை கண்டு கொள்ளாமல் செல்வது வழக்கம் தான் என்றும், ரோஹித் – ஹர்திக் பிரச்சனை பெயரில் வேண்டுமென்றே இதனை மற்றொரு சர்ச்சையாக மாற்றுகிறார்கள் என்றும் இன்னொரு பக்கம் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

-Advertisement-

சற்று முன்